மீண்டும் ஏலியனாக மாறிய ஏபிடி. பாண்டியா ஓவரை தெறிக்கவிட்ட டிவில்லியர்ஸ் – வீடியோ

Divilliers
- Advertisement -

நேற்றைய போட்டியில் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ் நேற்றைய போட்டியில் 3 ஓவர்களுக்கு 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி வீரரான பாண்டியா வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் பவுண்டரி மொத்தம் 18 ரன்களை குவித்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா வீசிய 18 ஓவரை பிரித்து எடுத்த டிவில்லியர்ஸ் அடுத்த ஓவரில் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ஷ்ட வசமின்றி வெற்றிக்கு தேவையான இலக்கினை அடிக்க முடியாமல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

ABD

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement