ப்ளீஸ் விராட் கோலியை இப்படி வீணடிக்காதீங்க.. இந்தியா உ.கோ வெல்ல அந்த ரிஸ்க் எடுக்கனும்.. ஏபிடி ஓப்பன்டாக்

AB De Villiers
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி பார்படாஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக இந்த தொடரில் துவக்க வீரராக விளையாடும் விராட் கோலி லீக் சுற்றில் 1, 4, 0 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

எனவே அவரை மீண்டும் மூன்றாவது இடத்தில் களமிறக்க வேண்டும் என்பது பல ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏனெனில் கடந்த காலங்களில் 3வது இடத்தில் களமிறங்கிய அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்து 2 தொடர்நாயகன் விருதுகளை வென்றுள்ளார். ஆனால் இம்முறை துவக்க வீரராக களமிறங்கிய அவர் முதல் முறையாக டக் அவுட்டானார்.

- Advertisement -

ஏபிடி கருத்து:
இருப்பினும் லீக் சுற்று நடைபெற்ற அமெரிக்காவை விட சூப்பர் 8 நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் தரமாக இருக்கும் என்பதால் விராட் கோலி தொடர்ந்து துவக்க வீரராகவே விளையாடுவார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் காரணமின்றி விராட் கோலி துவக்க வீரராக களமிறக்கி வீணடிக்கக்கூடாது என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

மேலும் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடும் யுக்தியை கடந்த டி20 உலகக் கோப்பையில் தவற விட்டு இந்தியா தோல்வியை சந்தித்ததாக டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாடினால் உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்தியா தரமான அணியை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ப்ளீஸ் விராட் கோலியை 3வது இடத்தில் விளையாட வையுங்கள் என்று நான் எப்போதும் சொல்கிறேன்”

- Advertisement -

“தற்போது இந்தியா நல்ல பிட்ச்சில் விளையாட உள்ளது. எனவே விராட் கோலி 3வது இடத்தில் அசத்தக்கூடியவர். அட்டாக் செய்து விளையாடும் திறமையை கொண்டுள்ள அவர் தேவைப்பட்டால் அழுத்தத்தை உள்வாங்கி நங்கூரமாகவும் விளையாடுவார். மிடில் ஓவர்களில் அவர் உலகின் மிகச் சிறந்த வீரர். எனவே அவர் துவக்க வீரராக விளையாடுவதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க: ரசித் கான் கிடையாது.. அந்த ஆப்கானிஸ்தான் பவுலர் ஆப்பு வைக்கலாம்.. விராட் – ரோஹித்தை எச்சரித்த ஸ்டைன்

“ஐசிசி தொடர்களில் நீங்கள் முதல் குத்தை விடுகிறீர்கள் என்பதில் உறுதியாக இருங்கள். கடந்த உலகக் கோப்பைகளில் அவர்கள் கொஞ்சம் பழமைவாதமாக இருந்ததாக நினைக்கிறேன். இந்தியா ஒரு தரமான அணி. எனவே வேகத்தை பெறுவதற்கு விளையாட்டின் ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement