- Advertisement -
டி20

41 பந்தில் 100.. 12.2 ஓவரில் 153.. இங்கிலாந்தை சொந்த மண்ணில் தனியாளாக தெறிக்க விட்ட ஏபிடி.. தெ.ஆ ஹாட்ரிக் வெற்றி

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜூலை 24ஆம் தேதி லெய்செஸ்டர் மைதானத்தில் 8வது போட்டி நடைபெற்றது. அதில் இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் போராடி 152/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ரவி போபாரா 7, மொயின் அலி 10, இயன் பெல் 7 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்கள். அதிகபட்சமாக முஸ்டர்ட் 39, கேப்டன் இயன் மோர்கன் 20, சமித் படேல் 24 ரன்களை எடுத்தார்கள்.

- Advertisement -

மாஸ் காட்டிய ஏபிடி:

மறுபுறம் சிறப்பாக பவுலிங் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகபட்சமாக இம்ரான் தாஹிர் மற்றும் வேன் பர்னல் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக 153 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்க அணிக்கு ஹாசிம் அம்லா நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

கடந்த போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் அபாரமாக பேட்டிங் செய்து இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 21 பந்துகளிலேயே அரை சதத்தை அடித்தார். மறுபுறம் அம்லா அவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

41 பந்தில் சதம்:

இந்தப் பக்கம் தொடர்ந்து இங்கிலாந்து பவுலர்களை பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்ட டீ வில்லியர்ஸ் வெறும் 41 பந்தில் சதத்தை அடித்து அசத்தினார். இறுதியில் கடைசி வரை அவுட்டாகாத அவர் 15 பவுண்டரி 7 சிக்சருடன் 116* (51) ரன்களை 227.55 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் அம்லா 29* (25) ரன்கள் எடுத்ததால் 12.2 ஓவரிலேயே தென்னாப்பிரிக்கா 153/0 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க: தாக்கூர் மாதிரி ஃபிட்ஸ், ஃபீஸஸ் பிளேயர் இந்தியாவுக்கு அதை செய்ய மாட்டாரு.. எதுக்கு எடுத்தீங்க.. சித்து கேள்வி

அதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 3 போட்டிகளில் 3வது வெற்றியைப் பதிவு செய்தது. அதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய அந்த அணி செமி ஃபைனல் செல்வதற்கு நல்ல அடித்தளத்தை அமைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இங்கிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் தெறிக்க விட்டு 41 வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்த ஏபி டீ வில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -