வயசாகிட்டா கரப்பான் பூச்சி மாதிரி ஏன் கடிக்க வறீங்க? விராட், ரோஹித் விமர்சனங்களை விளாசிய ஏபிடி

AB De Villiers
- Advertisement -

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற இந்தியா ஒயிட்வாஸ் அவமானத் தோல்வியை தவிர்த்தது. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மா 121*, விராட் கோலி 74* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றினர்.

அதனால் 2027 உலகக் கோப்பையில் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை ரோஹித் சர்மா தலைமையில் வென்று இந்தியா சாதனை படைத்தது. அப்போது 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாக அவரும் விராட் கோலியும் தெரிவித்தார்கள்.

- Advertisement -

கரப்பான் பூச்சிகள்:

ஆனால் அப்போது 40, 38 வயதில் அவர்களால் ஃபிட்டாக நல்ல ஃபார்மில் அசத்த முடியாது என்று தேர்வுக்குழு கருதுகிறது. அதனாலேயே ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடினாலும் வயதாகி விட்டால் ஓய்வு பெறுமாறு சொல்லி நிறைய கரப்பான் பூச்சிகள் கடிப்பதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் 2027 உலகக் கோப்பையில் விளையாடத் தயாராகும் விராட், ரோஹித்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதை விட்டுவிட்டு அவர்களை விமர்சிப்பவர்கள் பற்றி டீ வில்லியர்ஸ் பேசியது பின்வருமாறு. “மக்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அவர்களை மக்கள் என்று அழைக்கலாமா? என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் வீரர்கள் தங்களுடைய கேரியரின் பின்பகுதிக்கு வந்ததும் சில கரப்பான் பூச்சிகள் ஓட்டையிலிருந்து வெளியே வருகின்றன”

- Advertisement -

ஏபிடி விளாசல்:

“ஏன் அப்படி செய்கிறீர்கள்? அழகான கிரிக்கெட்டில் தங்களுடைய வாழ்க்கையை நாட்டுக்காக கொடுக்கும் வீரர்கள் மேல் ஏன் எதிர்மறை எண்ணங்களை தெளிக்கிறீர்கள்? இது அவர்களைக் கொண்டாடுவதற்கான நேரமாகும். சில மாதங்களாக விராட், ரோஹித் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டனர். அனைவரும் அவர்களை காரணமே இல்லாமல் கீழே தள்ள முயற்சித்தனர்”

இதையும் படிங்க: நம்பர் ஒன் இந்தியாவுடன்.. நம்பர் 2 ஆஸி ஸ்டைலை சோதிக்க நல்ல சான்ஸ் கிடைச்சுருக்கு.. கோச் மெக்டொனால்ட்

“ஏன் இப்படி செய்கிறார்கள்? என்ற ஐடியா எனக்கு இல்லை. இங்கே நான் விமர்சிக்கும் குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்கிறேன். ஏனெனில் பெரும்பாலான மக்கள் ரோஹித், விராட் ஆகியோருடைய கேரியரை கொண்டாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களை மீண்டும் ஒருமுறை கொண்டாடுவது நல்லதாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விராட், ரோஹித் தெனாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் அடுத்த மாதம் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement