நம்பர் ஒன் இந்தியாவுடன்.. நம்பர் 2 ஆஸி ஸ்டைலை சோதிக்க நல்ல சான்ஸ் கிடைச்சுருக்கு.. கோச் மெக்டொனால்ட்

Andrew McDonald
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 2 – (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே சொல்லலாம். எனவே இத்தொடரில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

- Advertisement -

நம்பர் ஒன் இந்தியா:

இந்நிலையில் கடந்த சில டி20 உலகக் கோப்பைகளில் ஆஸ்திரேலியா வெற்றிகரமாக செயல்படவில்லை என்று பயிற்சியளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். அதனால் எதிரணிகளை அடித்து நொறுக்கும் புதிய அணுகுமுறையை ஆஸ்திரேலியா கையிலெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்த அணுகுமுறையில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடர்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அதை தற்போது அணுகுமுறையை நம்பர் ஒன் இந்தியாவுக்கு எதிராக சோதித்து பார்க்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி மெக்டொனால்ட் பேசியது பின்வருமாறு. “எங்கள் அணியில் மாற்றம் இருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன் எங்களுக்கு 11 போட்டிகள் இருக்கின்றன. சமீபத்திய உலகக் கோப்பைகளில் நாங்கள் தோற்றுள்ளோம். எனவே நாங்கள் புதிதாக மாற்றத்தை தைய்க்க விரும்புகிறோம்”

- Advertisement -

நம்பர் 2 ஆஸ்திரேலியா:

“அதனால் நாங்கள் அதிக ஆக்ரோசமாக விளையாட முடிவெடுத்துள்ளோம். அதற்காக வெவ்வேறு வீரர்களை வெவ்வேறு இடங்களில் விளையாட வைக்கிறோம். இதற்கு முன் டிம் டேவிட் கொஞ்சம் மேலே பேட்டிங் செய்தார். இந்த அணுகுமுறையில் நாங்கள் சில தொடர்களில் வெற்றிகரமாக செயல்படவில்லை. எனவே எங்களுடைய அணுகுமுறையில் தேவையான மாற்றங்களை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: முதல் டி20 நடைபெறும் கான்பெரா மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“இதுவே உலகக் கோப்பையில் எங்களுடைய ஸ்டைலாக இருக்கும் என்று நம்புகிறோம். டெல்லி, கொல்கத்தா, கொழும்பு உட்பட போட்டி எங்கே நடைபெற்றாலும் அசத்துவது முக்கியம். நீங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதால் உங்கள் ஸ்டைலை சோதிக்க நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் நம்பர் ஒன் அணியாக இருக்கிறார்கள். எனவே நம்பர் 2 அணியாக இருக்கும் நாங்கள் சிறந்த அணிக்கு எதிராக எங்களை சோதிக்க உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். எங்களது இளம் வீரர்கள் உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள்” என்று கூறினார்.

Advertisement