ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் மோசமான ஃபார்மில் இருந்த துணைக் கேப்டன் சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் ஹர்ஷித் ராணாவை தேர்ந்தெடுத்தது இந்திய அணிக்கு பிரச்சனையைக் கொடுக்கலாம் என்று தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் புதிய பந்தில் அசத்துவதற்கு தேவையான அனுபவம் ராணாவிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே பவர்பிளே ஓவர்களை வீசுவதற்கு அர்ஷ்தீப், பும்ரா போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ராணாவின் தேர்வு:
அதனால் இடைப்பட்ட நேரங்களில் பற்றாக்குறை ஏற்படும் ஓவர்களை ஹர்திக் பாண்டியா, சிவம் துபே ஆகியோர் வீசுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்திய அணியில் ராணாவின் தேர்வு அனுபவ ரீதியாக பிரச்சினையைக் கொடுக்கலாம் என்று ஏபி டீ வில்லியர்ஸ் மறைமுகமாக பேசியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஹர்ஷித் ராணாவிடம் உள்ள பிரச்சனை என்னவெனில், அவரிடம் புதிய பந்தில் பவுலிங் செய்வதற்கு தேவையான நிறைய சர்வதேச அனுபவமில்லை. ஆனால் அர்ஷ்தீப், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரிடம் சேர்ந்து அவரால் உங்களுக்கு சில ஓவர்களை வழங்க முடிந்தால் அதுவே போதுமானது. எஞ்சியுள்ள ஓவர்களை வீசுவதற்கு பாண்டியா மற்றும் சிவம் துபே உள்ளார்கள்”
ஏபிடி கருத்து:
“இது மட்டுமின்றி இந்திய அணி சுழல் வீச்சுத் துறையில் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்கள். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய நல்ல கூட்டணியால் ஒருவேளை பும்ராவுக்கு சிறப்பான நாள் அமையாவிட்டால், அன்று குல்தீப் யாதவ் வந்து 4 ஓவர்களை போட்டு அசத்திக் கொடுப்பார்”
இதையும் படிங்க: ராணாவால் அவருக்கு டி20 உ.கோ சான்ஸ் கிடைக்கல.. ஆனா 2027 உ.கோ வாய்ப்பு கிடைக்கும்.. ஏபிடி பேட்டி
“அதே போல ஹர்திக் பாண்டியா மிடில் ஓவர்களில் வந்து போட்டியின் வேகத்தை மாற்றக்கூடிய தன்மைக் கொண்டவர். இப்படிப்பட்ட பவுலர்களை தான் நீங்கள் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கு அணியில் இருக்க விரும்புவீர்கள். அந்த வகையில் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து அடிப்படைகளையும் பூர்த்தி செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.



