ஸ்ரேயாஸ்க்கு எதிரான உண்மை ஒருநாள் வெளியே வரும்.. அதுக்கு பின்னாடி என்ன நடக்குதுன்னு தெரியாது.. ஏபிடி

AB De Villiers
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டது பெரிய விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் கடந்த சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்து சென்றார். மேலும் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

ஆனால் அப்படிப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பை ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்காததே ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டதற்கான உண்மையான காரணம் ஒரு நாள் வெளியே வரும் என்று தெனாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் தேர்வுக்குழுவின் கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

உண்மை வெளியே வரும்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் எடுக்கப்படாதது கடினமானது. அவர் இந்திய அணியில் எங்கே பொருந்துவார் என்பது பற்றி நானும் சிந்தித்தேன். அது பற்றிய தலைப்புச் செய்திகளில் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருப்பதை நான் பார்த்தேன். ஸ்ரேயாஸ் மிகவும் ஏமாற்றத்துடன் இருப்பார். ஏனெனில் கடந்த சில வருடங்களாக அவர் மிகவும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்”

“தற்போது நல்ல முதிர்ச்சித்தன்மையைப் பெற்றுள்ள அவர் கேப்டன்ஷிப் தரத்தையும் காண்பித்தார். ஆனால் மூடப்பட்ட கதவுகளுக்கு பின் என்ன நடக்கிறது இது என்பதை யார் அறிவார்? அங்கே நடந்தது எனக்கும் உங்களுக்கும் தெரியாது. ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூட அது தெரியாது. ஆனால் தரமான வீரரான அவருக்கு என்னுடைய அணியில் இடம் உண்டு”

- Advertisement -

ஏபிடி ஆதரவு:

“நான் கேப்டனாக இருந்த போதும் 2 வீரர்களுக்கிடையே 50 – 50 தேர்வு வந்தால், களத்திற்கு வெளியே அதிகப்படியான பங்காற்றக்கூடிய வீரரை தேர்ந்தெடுக்க ஆதரவளிப்பேன். களத்தில் 50 – 50 என்று வரும் போது அந்த வீரர் அணிக்கு மதிப்பு சேர்க்கறாரா? முகத்தில் சிரிப்பை வைத்திருக்கிறாரா? மற்ற வீரருக்கு ஆதரவாக இருக்கிறாரா? அல்லது அணியில் சக்தியை இழக்க வைக்கிறாரா? போன்றவற்றை பார்ப்பேன்”

இதையும் படிங்க: சண்டையை டிராவிட் தடுத்தாரு.. காலை நகர்த்தாமயே 184 ரன்ஸ் அடிச்சு சேப்பலுக்கு பதிலடி கொடுத்தேன்.. சேவாக் பேட்டி

“இருப்பினும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் போன்ற கேப்டன்ஷிப் பண்புகளையும் கொண்ட தரமான வீரர் இல்லாதது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. அவருக்கு நிறைய போட்டிகள் இருப்பதாலும் இடம் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது அணியில் அதிகப்படியான கேப்டன்கள் இருப்பதால் இருக்கலாம். எப்படி இருந்தாலும் ஒரு நாள் ஸ்ரேயாஸ் உண்மையிலேயே ஏன் இந்திய அணிக்குள் வரத் தடுமாறுகிறார் என்பது பற்றிய உண்மைகள் வரலாம்” என்று கூறினார்.

Advertisement