இதைக் கேட்டா சிரிப்பு தான் வருது.. கோப்பை ஜெய்க்கனாலும் பஃப், விராட் இதுக்கு தகுதியானவங்க.. ஏபிடி பேட்டி

AB De Villiers
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை நடைபெறும் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்க முடியும். முன்னதாக 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது.

எனவே தம்மை மதிக்காத மும்பை அணியிலிருந்து ரோஹித் சர்மா வெளியேற வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் சமீபத்தில் கூறியுள்ளார். அது போன்ற சூழ்நிலையில் ரோஹித் சர்மாவை பெங்களூரு நிர்வாகம் வாங்கி தங்களுடைய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் ஃகைப் கூறியிருந்தார். ஏனெனில் ரோஹித் சர்மா கேப்டனாகவே விளையாடுவதற்கு தகுதியானவர் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

பெங்களூருவில் ரோஹித்:

அப்படி செய்தால் டி20 உலகக் கோப்பை வென்ற ரோகித் சர்மா ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் கைஃப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆர்சிபி அணியில் ரோகித் சர்மா விளையாடுவார் என்று கேட்பது தமக்கு சிரிப்பை ஏற்படுத்துவதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். மேலும் கோப்பை வெல்லாவிட்டாலும் பஃப் டு பிளேஸிஸ், விராட் கோலி ஆகியோர் ஆர்சிபி தக்க வைக்க வேண்டிய தகுதியான வீரர்கள் என்றும் டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா பற்றிய கருத்தைக் கேட்டு கிட்டத்தட்ட நான் சிரித்து விட்டேன். மும்பை அணியிலிருந்து ஆர்சிபி அணிக்கு ரோஹித் சர்மா நகர்ந்தால் அது தலைப்புச் செய்தியாக இருக்கும். அது குஜராத்திலிருந்து ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வந்ததை விட பெரிதாக இருக்கும்”

- Advertisement -

ஏபிடி கருத்து:

“குஜராத் அணியிலிருந்து பாண்டியா மும்பை வந்தது கூட பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் மும்பை அணியின் போட்டியான ஆர்சிபி அணியில் ரோஹித் சர்மா இணைவது மிகப்பெரிய விஷயம். கடவுளே அதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா விலகுவதற்கான சாத்தியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை”

இதையும் படிங்க: தோனி ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது அக்டோபர் 31-ஆம் தேதி தெரிஞ்சிடும் – எப்படி தெரியுமா?

“அதற்கு 0 அல்லது 0.1% மட்டுமே வாய்ப்பு இருக்கும் என்று நான் சொல்வேன். வயது என்பது வெறும் நம்பர் தான். டு பிளேஸிஸ் 40 வயதை தொட உள்ளார் என்பதை நான் பிரச்சனையாக பார்க்கவில்லை. கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதால் அவர் அழுத்தத்தில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் சிறப்பான வீரர். விராட் கோலியும் தன்னுடைய அனுபவத்துடன் மீண்டும் வருவார்” என்று கூறினார்

Advertisement