
ஆஸ்திரேலிய கிரிக்கெட் எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கியது. ஐசிசி டி20 தரவரிசையில் இந்தியா – ஆஸ்திரேலியா உலகின் டாப் 2 அணிகளாக திகழ்கின்றன.
இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளதால் இத்தொடரில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 9.4 ஓவரில் 97/1 ரன்கள் எடுத்தது அதிரடியாக விளையாட துவங்கியது. அப்போது மழை வந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக 2வது போட்டி அக்டோபர் 31ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அப்போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தயாராக இருக்கின்றன. இந்நிலையில் தொடரில் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவை விட இந்தியாவின் சிக்சர் அடிக்கும் விகிதம் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற படி தரமான இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இத்தொடர் அனைவருக்கும் விருந்தாக இருக்கும் என்றும் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது இந்தியாவுக்கு வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் தொடர். எனவே ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் அதிக வாய்ப்பு இருக்கிறது”
“தற்சமயத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 சிறந்த அணிகளாக இருக்கின்றன. கடந்த 2024 ஜூலைக்குப் பின் அவர்கள் அதிக வெற்றிகளைப் பெற்ற டாப் 2 அணிகளாக இருக்கின்றனர். ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் உட்பட அனைத்து விதமான நாடுகளிலும் விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுடைய வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான வாய்ப்பைப் பெறுகின்றனர்”
இதையும் படிங்க: 2வது டி20 போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச் ரிப்போர்ட்
“அதே போல இந்திய அணி ஐபிஎல் தொடரால் நிறைய வெகுமதிகளைப் பெற்றுள்ளார்கள். ஐபிஎல் என்பது டி20 கிரிக்கெட்டில் பெரிய வேலையை செய்கிறது என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா ஒவ்வொரு 10.6 பந்துக்கு ஒருமுறை சிக்சர் அடிக்கிறது. இந்தியா 12.1 பந்துக்கு ஒருமுறை சிக்சர் அடிக்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.