இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் களமிறங்க உள்ளது. அதில் டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது. சமீபத்தில் 2025 ஆசியக் கோப்பையை சூரியகுமார் தலைமையில் வென்ற இந்திய அணி அடுத்ததாக தரமான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக ஆசியக் கோப்பையில் எதிரணிகளை அடித்து நொறுக்கி தொடர்நாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் நல்ல ஃபார்மில் இருக்க்கிறார். இருப்பினும் இதற்கு முன் அவர் சவாலான ஆஸ்திரேலியாலில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியதில்லை.
சிறந்த ஓப்பனர்:
எனவே ஆஸ்திரேலியா மண்ணில் அவருடைய ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் அபிஷேக் சர்மா தற்சமயத்தில் உலகின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக திகழ்வதாக ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்சமயத்தில் நல்ல ஃபார்மிலும் இருக்கும் அபிஷேக் ஆஸ்திரேலியாவில் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அபிஷேக்கின் அதிரடியான ஆட்டத்தின் பின்னணி பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் சர்மா தனது வாழ்வின் உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். தற்சமயத்தில் அவர் டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பதாக சிலர் சொல்கிறார். அப்படிப்பட்ட அவரால் ஆஸ்திரேலியாவில் அசத்த முடிகிறதா? என்பதை பார்ப்பது சிறப்பாக இருக்கும்”
ஆஸ்திரேலியா சவால்:
“அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள பவுன்ஸ்க்கு சாதகமான சூழ்நிலைகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார் என்று நினைக்கிறேன். தன்னுடைய கைகளை ஆஃப் சைட் திசையில் சுதந்திரப் படுத்தும் அவர் பேட்டை சுழற்றி பாயிண்ட் முதல் தேர்ட்மேன் வரையிலான பவுண்டரி தூரத்தை கவர் சிக்ஸர்களை அடிக்கிறார். அதே போல லெக் சைட் திசையிலும் அடிக்கும் அவர் பார்ப்பதற்கு கவரக்கூடிய ஆல் ரவுண்ட் பேட்ஸ்மேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஜடேஜா விடயத்தில் அஜித் அகார்கர் தப்பு செஞ்சிட்டாரு.. அப்படி பண்ணியிருக்க கூடாது – சடகோபன் ரமேஷ் ஆதங்கம்
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடும் டி20 தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கும்கிறது. அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 6, 8 ஆகிய தேதிகளில் 5 போட்டிகள் நடைபெறுகின்றன. அந்தப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா தோற்கடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்



