AB de Villiers : மிஸ்டர் 360 ஷாட்டை அடித்த ஏ.பி. டிவில்லியர்ஸ் – வீடியோ

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல்

Divilliers
- Advertisement -

பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று இரவு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார் டிவில்லியர்ஸ். அதிலும் குறிப்பாக நேற்று 11 மாதங்கள் கழித்து மீண்டும் தனது பழைய ஸ்டைலில் சிக்ஸ் ஒன்றினை லெக் திசையில் முட்டி போட்டு ஸ்வீப் செய்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

Kohli

பிறகு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் கோலி 67 ரன்களும் மற்றும் டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை அடைய வைத்தார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement