இந்த பையன் கூட நானும் விளையாடிருக்கேன்.. விவரிக்க வார்த்தையே இல்ல.. இளம் வீரர்களை பாராட்டிய ஏபிடி

AB De Villiers 4
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 3 போட்டியின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி ஆரம்பத்திலேயே சொந்தக் காரணங்களுக்காக வெளியேறிய நிலையில் கே.எல். ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் காயத்தை சந்தித்தனர். அதனால் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் 545* ரன்கள் குவித்து விராட் கோலி இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2வது போட்டியில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்த அவர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக கடந்த போட்டியில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு 12 சிக்சர்களுடன் 214* ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:
அதே போல மூன்றாவது போட்டியில் அறிமுகமான சர்பராஸ் கான் 62, 68* ரன்கள் குவித்து 2 இன்னிங்சிலும் சதமடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். இவர்களை விட அனுபவமிக்க சுப்மன் கில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2வது போட்டியில் 104 ரன்களும் 3வது போட்டியில் 91 ரன்கள் அடித்து இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு கை கொடுத்தார்.

அந்த வகையில் இத்தொடரில் அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் இந்த 3 இளம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தனித்தனியே பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த பையனுடன் ஏற்கனவே நான் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடியுள்ளேன். மிகவும் பணிவான நபரான அவரைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். சர்பஃராஸ் கான் 50 ரன்கள் அடித்ததும் அவருடைய அப்பா முத்தமிட்டு கொண்டாடியதை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதைப் பார்க்க என்னுடைய மனதுக்கும் இதமாக இருந்தது. ஜெய்ஸ்வால் பற்றி பேசுவதற்கு வார்த்தைகள் போதாது”

இதையும் படிங்க: உசுப்பேத்தியே கெடுத்துட்டாங்க.. உங்களோட இயற்கையான ஆட்டத்தை ஆடுங்க.. நட்சத்திர வீரருக்கு ஏபிடி கோரிக்கை

“அதிரடியாக விளையாடுவது அவருடைய பேட்டிங்கை எளிதாக நமக்கு காட்சிப்படுத்துகிறது. ஜெய்ஸ்வால் விளையாடுவதை நான் எப்போதும் பார்க்க விரும்புவேன். அவருக்கு எதிராக பவுலர்கள் அழுத்தத்துடன் பந்து வீசுவது தெரிகிறது. அதே போல சுமாரான ஃபார்மில் இருந்த சுப்மன் கில் தன்னுடைய கேரியரின் முக்கிய நேரத்தில் முக்கிய இன்னிங்ஸ் விளையாடினார். அந்த இன்னிங்ஸ் இந்திய அணியில் அவர் நிம்மதி பெருமூச்சு விடுவதற்கான வாய்ப்பை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

Advertisement