- Advertisement -
ஐ.பி.எல்

அதுல ஆர்சிபி 10 மடங்கு பெஸ்ட்டா அமைஞ்சுருக்கு.. கோப்பை ஜெயிக்க துவக்கம் கிடைச்சாச்சு.. ஏபிடி மகிழ்ச்சி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் பெங்களூரு தோற்கடித்தது. அடுத்ததாக வலுவான சென்னையை அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் பெங்களூரு அணி 17 வருடங்கள் கழித்து வீழ்த்தியது.

அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள பெங்களூரு 9 அணிகளை காட்டிலும் அதிக ரன் ரேட்டை கொண்டுள்ளது. அதன் காரணமாக இம்முறை கோப்பையை பெங்களூரு வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் வரலாற்றில் இருந்த ஆர்சிபி அணிகளை விட தற்போதைய அணியின் சமநிலை (பேலன்ஸ்) 10 மடங்கு சிறப்பாக இருப்பதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

10 மடங்கு சிறப்பு:

எனவே இம்முறை கோப்பையை வெல்வதற்கு தேவையான துவக்கத்தை பெங்களூரு அற்புதமாக பெற்றுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “புவனேஸ்வர் குமாரை பார்த்த நான் இவர் சென்னைக்கு எதிராக விளையாட மாட்டார் என்று நினைத்தேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாய்ப்பைப் பெற்ற அவர் சிறப்பாக விளையாடினார்”

“அதனாலேயே அவரைப் போன்றவர் உங்களுக்கு தேவை. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் விளையாடவில்லை. அதையும் தாண்டி அந்தப் போட்டியில் நாம் வென்றோம். தற்போது இரண்டாவது போட்டியில் புவனேஸ்வர் வந்து வென்றுள்ளோம். இது போன்ற சமநிலை மற்றும் ஆழமான திறமை தான் உங்களுக்கு தேவை”

- Advertisement -

ஏபிடி நம்பிக்கை:

“நடப்புச் சாம்பியன் கொல்கத்தாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரைத் துவக்கிய பெங்களூரு அணி சென்னையை அற்புதமான ரெக்கார்டை வைத்திருந்த சேப்பாக்கம் மைதானத்தில் தோற்கடித்துள்ளது. இங்கிருந்து ஆர்சிபி அணியின் பயணம் எளிதாக இருக்கும். ஏனெனில் புள்ளிப்பட்டியலில் அவர்கள் மட்டுமே 2 வெற்றிகளுடன் டாப் இடத்தில் சிறந்த ரன் ரேட்டைக் கொண்டுள்ளனர்”

இதையும் படிங்க: தோனி செய்தது தப்பு.. இனிவரும் போட்டிகளில் அவர் இதை செய்தால் நல்லா இருக்கும் – வாட்சன் கருத்து

“அந்த வகையில் ஆர்சிபி அணிக்கு இது நல்ல துவக்கம். அதனால் இது கோப்பையை வெல்லப்போகும் வருடமா என்று நாம் சிந்திக்க வேண்டாம். ஆனால் பெங்களூரு அணி அதற்கான சிறப்பான துவக்கத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக சொந்த மண்ணுக்கு வெளியே விளையாடுவதில் பெங்களூரு அசத்துகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் ஆர்சிபி அணியின் சமநிலை 10 முறை சிறப்பாக இருக்கிறது. பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஃபீல்டர்கள் என்பதைத் தாண்டி கோப்பையை வெல்ல நல்ல சமநிலை வேண்டும் என்று நான் ஏலத்தின் போது சொன்னேன். அது தற்போது ஆர்சிபி அணியிடம் இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -