ஸ்காட் ஸ்டைரிஸிடம் சிஎஸ்கே அணியை வைத்து சவால் விட்ட ஏபிடி.. நேரலை வர்ணனையில் அரங்கேறிய சவால்

Ab De Villers and Styris
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற 6வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 4 வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. பெங்களூரு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேப்டன் சிகர் தவான் 45, ஜிதேஷ் சர்மா 27 ரன்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 3, க்ரீன் 3, கிளன் மேக்ஸ்வெல் 3, ரஜத் படிடார் 18, அனுஜ் ராவத் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் மறுபுறம் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 28*, மகிபால் லோம்ரர் 17* ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

சிஎஸ்கே சவால்:
முன்னதாக இந்த வருட மகளிர் ஐபிஎல் தொடரில் ஸ்ருத்தி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சரித்திர படைத்தது. அதனால் கோப்பையை வெல்ல முடியாது என்று காணப்பட்ட கிண்டல்களை உடைத்த மகளிரணி முதல் கோப்பையை வென்றதால் ஆடவர் தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஆர்சிபி ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அதே போல “இந்த வருடம் மகளிரணி வென்றதை போல ஆடவர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லும் அது தான் விதி” என்று நட்சத்திரம் முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அது போக “தம்முடைய ஜெர்சி நம்பர் 17. இது 17வது ஐபிஎல் சீசன். எனவே இம்முறை ஆர்சிபி கோப்பையை வெல்லும்” என்றும் அவர் உறுதியான நம்பிக்கையை தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் நடைபெற்ற இப்போட்டியிலும் விராட் கோலி அவுட்டானதும் பெங்களூரு வெற்றி கேள்விக்குறியானது. அப்போது வர்ணனையாளர்களாக செயல்பட்ட ஏபி டீ வில்லியர்ஸ் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: நாங்க செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைச்சுடுச்சு.. ஆர்சிபி’யிடம் சந்தித்த தோல்வியால் ஷிகர் தவான் வருத்தம்

அதாவது ஆர்சிபி தோற்றால் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே ஜெர்சியை தாம் அணிவதாக ஏபி டீ வில்லியர்ஸ் சவால் விட்டார். மறுபுறம் ஆர்சிபி வென்றால் அந்த அணியின் அடுத்த போட்டியில் பெங்களூரு ஜெர்சியை தாம் அணிவதாக ஸ்டைரிஸ் சவால் விட்டார். கடைசியில் சிறப்பான வெற்றி பெற்ற ஆர்சிபி ஏபி டீ வில்லியர்ஸ் சவாலையும் மானத்தையும் காப்பாற்றியது. அதன் காரணமாக அடுத்த போட்டியில் ஸ்டைரிஸ் ஆர்சிபி ஜெர்சியை அணிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement