எனக்கே தெரியாது.. தப்பு நடந்துடுச்சு மன்னிச்சுடுங்க.. விராட் கோலி பற்றிய கருத்தை வாபஸ் பெற்ற ஏபிடி

Ab De Villiers 3
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் 5 போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் அவருடைய சொந்த காரணங்களை பற்றி தெரிந்து கொண்டு எந்த இடையூறும் செய்யாமல் அமைதியாக இருக்குமாறு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு பிசிசிஐ வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அந்த சூழ்நிலையில் விராட் கோலிக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் ஒரு ரசிகரின் கேள்விக்கு யூடியூப் பக்கத்தில் தெரிவித்தார்.

- Advertisement -

வாபஸ் பெற்ற ஏபிடி:
அதனாலேயே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பல வருடங்களாக இணைந்து விளையாடியதால் நண்பராக இருக்கும் அவரிடம் விராட் கோலி தன்னுடைய சொந்த வாழ்க்கையைப் பற்றிய முக்கிய விஷயத்தை கூறியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அப்படி நண்பனாக மதித்து கூறிய விஷயத்தை ஏபி டீ வில்லியர்ஸ் இப்படி வெளி உலகத்திற்கு சொல்லலாமா என்று அவர் மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் விராட் கோலி பற்றி ஏற்கனவே தாம் சொன்ன கருத்துக்களை தவறுதலாக கூறிவிட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலியின் நிலைமை என்ன என்பது பற்றி உண்மையான நிலைமையை அறியாமல் தவறுதலாக சொன்ன கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய யூடியூப் பக்கத்தில் ஏற்கனவே சொன்னது போல குடும்ப முக்கியம். அதற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். தேசிய அணிக்காக விளையாடும் கடமையிலிருந்து குடும்பத்திற்காக விடுப்பு எடுக்கும் அனைத்து உரிமையும் விராட் கோலிக்கு இருக்கிறது. அதே சமயம் நான் தவறான தகவலை பகிர்ந்து தவறு செய்து விட்டேன். அது எந்த வகையிலும் உண்மையில்லை. யாருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாது”

இதையும் படிங்க: இப்போதான் சி.எஸ்.கே அணி வாங்கிச்சி.. அதுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனையா? – டேரல் மிட்சல் சந்தேகம்

“விராட் கோலிக்கு அவருடைய குடும்பம் முக்கியம். அவருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். எந்த காரணத்துக்காக விடுப்பு எடுத்திருந்தாலும் அவர் விரைவில் கம்பேக் கொடுப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளிலும் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement