இந்த பேராசையால் தடுமாறும் இந்திய கேப்டன் சூரியகுமார்.. ஃபார்முக்கு திரும்ப இதை செய்யனும்.. ஏபிடி அட்வைஸ்

AB De Villiers 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் 2025 ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியா மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகும் அத்தொடரில் வெற்றி பெறுவதற்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடுவது அவசியமாகிறது.

தாமதமாக 31 வயதில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறினார். குறிப்பாக எப்படி போட்டாலும் மைதானத்தின் நாலாபுரமும் அடித்து நொறுக்கி அணியின் வெற்றிகளில் பங்காற்றிய அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று பலரும் பாராட்டினர். அதனாலேயே கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் அவரை புதிய டி20 கேப்டனாக தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

பேராசையில் விழும் சூரியகுமார்:

அவருடைய தலைமையில் நல்ல வெற்றிகளைப் பெற்று வரும் இந்தியா தொடர்ந்து நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலித்து வருகிறது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் சூரியகுமார் பெரிய ரன்கள் எடுப்பதற்கு தடுமாறி வருகிறார். குறிப்பாக மெதுவாக வீசப்படும் ஃஸ்லோயர் பந்துகளை தவறாக கணிக்கும் அவர் தன்னுடைய விக்கெட்டை இழந்து வருகிறார். அதனால் ஸ்லோயர் பந்துகள் அவருடைய பலவீனமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஸ்லோயர் பந்துகள் சூரியகுமாரின் பலவீனம் அல்ல என்று மிஸ்டர் 360 பேட்ஸ்மேனாக போற்றப்படும் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். மாறாக ஸ்லோயர் பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பதே சூரியகுமாரின் தடுமாற்றத்திற்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே சூரியகுமார் முன்னேறி ஃபார்முக்கு திரும்ப அவர் கொடுத்துள்ள ஆலோசனை பின்வருமாறு.

- Advertisement -

ஏபிடி ஆலோசனை:

“அது அவருடைய பலவீனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் ஒரே மாதிரியான பந்துகளில் தொடர்ச்சியாக அவுட்டாகும் போது அது சம்பந்தமான டெக்னிக்கல் விஷயத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்தையும் விட உங்களுடைய மனநலையில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும். லோயர் பந்துகளில் சூரியகுமார் 1, 2 ரன்களை தாண்டி அதிக ரன்களை அடிக்க விரும்புகிறார்”

இதையும் படிங்க: ரஞ்சிக் கோப்பை 18/5 டூ 179/7.. 4 டக் அவுட்டை தாண்டி அணியை தூக்கிய ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

“அவர் அப்பந்துகளை ரன்கள் அடிக்கும் வாய்ப்பாக பார்க்கிறார். அவருடைய அந்த அட்டாக் செய்யும் மனநிலையை நான் விரும்புகிறேன். ஸ்லோயர் பந்துகளை முன்னதாகவே எடுத்து வேகம் கொடுத்து அடிப்பது அவருடைய பலமாகவும் இருந்தது. ஆனால் அங்கே அவர் தனது மனநிலையில் மாற்றம் செய்யாமல் கொஞ்சம் பேராசையுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கான தீர்வு என்னவெனில் நீங்கள் அந்தப் பந்துகளை இடைவெளி பார்த்து அடித்து 2 ரன்கள் எடுங்கள். மேலும் அப்பந்துகளை பெரிய சிக்சர்களாக பறக்க விடாமல் தரையுடன் தரையாக அடிக்க முயற்சியுங்கள்” என்று கூறினார்.

Advertisement