ரஞ்சிக் கோப்பை 18/5 டூ 179/7.. 4 டக் அவுட்டை தாண்டி அணியை தூக்கிய ருதுராஜ்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

Ruturaj gaikwad
- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025 – 26 சீசன் அக்டோபர் 15ஆம் தேதி பல்வேறு நகரங்களில் துவங்கியது. அத்தொடரில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி திருவனந்தபுரத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா சொந்த மண்ணில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து துவங்கிய மகாராஷ்டிரா அணிக்கு பிரிதிவி ஷா டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்து வந்த சித்தேஷ் வீர் மற்றொரு துவக்க வீரர் அர்சின் குல்கர்னி ஆகியோர் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினர். அதனால் 0/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மகாராஷ்டிராவுக்கு அடுத்து வந்த கேப்டன் அன்கீத் பாவ்னேவும் டக் அவுட்டானார்.

- Advertisement -

தூக்கி நிறுத்திய ருதுராஜ்:

அப்போது 4வது இடத்தில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம் நங்கூரத்தை போட முயற்சித்த சௌரப் நவாலே 12 (12) ரன்களில் அவுட்டானதால் 18/5 என மகாராஷ்டிரா மேலும் திண்டாடியது. அதனால் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு மறுபுறம் ருதுராஜ் தொடர்ந்து நங்கூரமாக விளையாடினார்.

அவருடன் ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் ஜலஜ் சக்சேனா தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி கை கொடுத்தார். விக்கெட்டை விடக்கூடாது என்ற நோக்கத்தில் விளையாடிய அந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது. அதில் மிகவும் பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ் அரை சதத்தை அடித்தார்.

- Advertisement -

சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி:

எதிர்புறம் 6வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து காப்பாற்றிய சக்சனா 49 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இந்தப் பக்கம் தொடர்ந்து கேரள பவுலர்களுக்கு சவாலைக் கொடுத்த ருதுராஜ் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரியுடன் 91 (151) ரன்னில் அவுட்டானார். இறுதியில் நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தில் மகாராஷ்டிரா 179/7 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: இதுக்கு பேசாம அவருக்கு பதில்.. மேட்ச் வின்னர் அக்சர் பட்டேல் விளையாடலாமே.. கம்பீரை சாடிய அஸ்வின்

களத்தில் விக்கி ஒஸ்ட்வால் 10*, ராமகிருஷ்ணா கோஸ் 11* ரன்களுடன் உள்ளார்கள். கடந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் காயத்தால் ஆரம்பத்திலேயே வெளியேறியது சிஎஸ்கே தோல்விக்கு முக்கிய காரணமானது. தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் 2025 இராணி கோப்பையில் சதத்தை அடித்து அசத்தினார். அதே வேகத்தில் இப்போட்டியிலும் மிகவும் கடினமான சூழ்நிலையில் அவர் 91 ரன்கள் அடித்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement