KXIP vs RCB : நான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது இதற்காக தான் – மனம் திறந்த டிவில்லியர்ஸ்

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான

ABD
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 28 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 64 பந்துகளில் 99 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

பிறகு 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் கோலி 67 ரன்களும் மற்றும் டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 59 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை அடைய வைத்தார். டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Devilliers

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் வாட்சன் கூறியதாவது : இந்த தருணத்திற்க்காக காத்திருந்தேன். இப்பொது மகிழ்ச்சியாக உணர்கிறேன். இது நாங்கள் எடுத்து வாய்த்த முதல் படிதான் இதற்கு மேல் தான் பெரிய படிகள் உள்ளன. நான் கிட்டத்தட்ட 10-11 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து விட்டேன். அதுவே நான் இப்போது கஷ்டப்படுவதற்கு காரணம்.

நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு காரணம் இதுதான். உலகெங்கிலும் நடக்கும் மற்ற போட்டிகளில் துல்லியமாக விளையாடவே தென்னாபிரிக்க அணியின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தேன். இப்போது மீண்டும் பயிற்சியினை தீவிரமாக செய்து வருகிறேன். வரும் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார் டிவில்லியர்ஸ்.

Advertisement