- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதை ஏற்கனவே செஞ்ச எங்களுக்கு இந்தியா சாதாரணம்.. தோற்கடிக்க திட்டம் இருக்கு.. அமெரிக்க வீரர் சவால்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் பன்னிரண்டாம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 25வது லீக் போட்டி நடைபெறுகிறது. அதில் அமெரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை 113 ரன்களுக்கு கட்டுப்படுத்தி மறக்க முடியாத வெற்றியை பெற்றது. அதனால் கிடைத்துள்ள எக்ஸ்ட்ரா தெம்புடன் கொஞ்சம் கத்துகுட்டியாக கருதப்படும் அமெரிக்காவுக்கு எதிரான 3வது போட்டியிலும் வென்று இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அமெரிக்காவின் சவால்:
இந்நிலையில் கனடாவை தோற்கடித்த தாங்கள் வலுவான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியதாக அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். எனவே டாப் அணியான பாகிஸ்தானை தோற்கடித்த தங்களால் இந்தியாவையும் வீழ்த்த முடியும் என்று அவர் சவால் தெரிவித்துள்ளார். அதனால் இந்தியாவுடனான போட்டியை சாதாரண போட்டியாக பார்ப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் நாங்கள் ஒரு சாதாரண போட்டியாகவே கருதுகிறோம். இந்தியா நல்ல அணி என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அது போன்ற நல்ல அணிகளை நாங்கள் ஏற்கனவே வீழ்த்தியுள்ளோம். நாங்கள் பெயரைப் பார்த்து அல்லது அணியை பார்த்து விளையாடுவதில்லை. கடந்த காலங்களில் வலுவான அணிகளை நாங்கள் வீழ்த்தியுள்ளோம்”

- Advertisement -

“எனவே இந்தப் போட்டியிலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக கடினமாக விளையாடுவோம். நாங்கள் எப்போதும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும் திட்டத்தை வகுப்போம். அணி மீட்டிங்கில் நாங்கள் ஒரு அணியாக நல்ல திட்டங்களை வகுத்துள்ளோம். பல்வேறு அணிகளுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பது பற்றிய ஐடியாவை எங்களுடைய பயிற்சியாளர் கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் சொதப்பிய பாண்டியா.. இந்தியாவுக்காக அசத்துவதற்கு இதான் காரணம்.. பேட்டிங் கோச் பாராட்டு

“எனவே இந்தியாவுக்கு எதிராகவும் அதே போலவே நாங்கள் விளையாடுகிறோம். எங்களிடம் சிறந்த சாத்தியமான திட்டம் இருப்பதால் அவர்களை வீழ்த்த முயற்சிப்போம்” என்று கூறினார். முன்னதாக கனடாவுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஆரோன் ஜோன்ஸ் அமெரிக்காவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதே போல பாகிஸ்தானுக்கு எதிராக சூப்பர் ஓவரில் 11 ரன்கள் அடித்த அவர் வரலாற்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -