மோசமான பார்ம் : ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவிக்கு வந்த கொலை மிரட்டல் – ஆஸி ரசிகர்களின் மோசமான செயல்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையிலான சர்வதேச டி20 போட்டித் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் மிக மோசமாக ஆடி வருகிறார். முதல் போட்டியில் 1 ரன்னும் இரண்டாவது போட்டியில் 12 ரன்னும் அடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாருக்கு பின்னர் ஸ்மித தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பிறகே அவருக்கு பதிலாக பின்ச் டி20அணியின் கேப்டனான இருந்து வருகிறார். சில தொடர்கள் இதுநாள் வரை சரியாக தலைமை தாங்கி வந்த நிலையில் சமீப காலமாகவே சொல்லி கொள்ளும் அளவில் பெரிய இன்னிங்ஸ் எதும் ஆடவில்லை. நடந்து முடிந்த பிக்-பாஷ் தொடரில் 13 இன்னிங்சில் ஆடி வெறும் 179 ரன்களே எடுத்துள்ளார்.அதுபோக ஐபிஎல் ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து உடனான 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்துள்ளது. ஒரு கேப்டனாக அவரும தனது சிறப்பான பங்களிப்பை தரவில்லை. இதன் காரணமாக அவர்மீது பல்வேறு முரன்பாடான கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

finch 2

இந்நிலையில் சரியாக ஆடாத பின்ச்சை ரசிகர்கள் காரணம் காட்டி சமூக வலைதளங்களில் அவரது மனைவி எமிக்கு கொலை மிரட்டலும் பாலியல் மிரட்டல்களும் விடுத்துள்ளனர். இது தொடர்பாகசெய்தியாளர்களுக்கு பதிலளித்துள்ள எமி, “இணையத்தில் போர்க்கொடி தூக்குபவர்கள் அவர்களின் நிஜ வாழ்க்கையை முதலில் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட கீழ்தரமான செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை ரசிகர் என்று மட்டும் கூறிக்கொள்ளாதீர்கள்” என்று கடினமான வார்த்தைகளால் பதிலளித்துள்ளார்.

- Advertisement -

finch 1

பின்ச் மீதுள்ள கோபத்தை அவரது மனைவி மீது ரசிகர்கள் காட்டியுள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் முரண்பாடாக எந்தவித வார்த்தைகளையும் உதிர்க்க வேண்டாம் என்று பின்ச்க்கு சப்போர்ட் செய்து மேக்ஸ்வெல் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.