பெங்களூரு அணியிலும், கோலி கூடவும் விளையாட காத்திருக்கேன் – ஆஸி நட்சத்திர வீரர் பேட்டி

Rcb
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டனான ஆரோன் பின்ச் ஐபிஎல் தொடர்களில் பல அணிகளுக்காக இதுவரை விளையாடி உள்ளார். இந்நிலையில் இம்முறை அவரை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. இம்முறை முதல் முறையாக அவர் கோலியின் தலைமையில் விளையாட இருக்கிறார்.

Finch

- Advertisement -

இந்த ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த தொடரில் விளையாட இருக்கும் ஆரோன் பின்ச் இந்தத் தொடர் குறித்தும், ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி குறித்தும் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் : விராட் கோலி எப்படிப்பட்ட போட்டியாளர் மற்றும் உந்துதல் உள்ளவர் என்பது எனக்கு தெரியும்.

அந்த அணியுடன் இணைவதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். உலகின் தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு என்பது வேடிக்கையாக இருக்கும். மேலும் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற்று இருந்தால் இந்த போட்டி சிறப்பாக இருந்திருக்கும் இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுவது இன்னும் கூடுதலான விசேஷம் தான்.

நான் முதல் முறையாக கோலிக்கு கீழ் விளையாட இருக்கிறேன். அவருக்கு எதிராக சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ஏராளமாக விளையாடி உள்ளேன். அதனால் அவரின் பலம் எனக்கு தெரியும் சில விஷயங்களை அவரின் அருகிலிருந்து பார்க்க காத்துக்கொண்டிருக்கிறேன். எனது அனுபவம் எப்போதும் தயாராக இருக்கும்.

finch

அவருக்கு உதவி தேவைப்பட்டால் எப்பொழுதும் நான் அதை செய்ய தயாராக இருக்கிறேன். விராட் கோலி எது கேட்டாலும் அதன் பின் என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று பின்ச் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement