200க்கு மேல இலக்கு இருந்தும் நாங்க ஜெயிக்க இதுவே காரணம். வெற்றிக்கு பிறகு – ஆரோன் பின்ச் பேசிய என்ன?

Finch
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே செப்டம்பர் 20-ஆம் தேதி நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டி இறுதி வரை பரபரப்பாக சென்று முடிவடைந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.

INDvsAUS

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய இந்திய அணியானது ஆரம்பம் முதலே அதிரடி காட்ட பவுண்டரியும், சிக்ஸருமாக பறந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ராகுல் 55 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக அந்த அணியின் டாப் 3 வீரர்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதிக்கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக மேத்யூ வேட் 45 ரன்கள் அடித்து அசத்தினர்.

Mathew Wade

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி இந்த போட்டியில் 200 ரன்களுக்கு மேல் குவித்தும் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில் :

- Advertisement -

இந்த போட்டி இரு அணிகளுக்குமே மிக சவால் நிறைந்த ஒன்றாக இருந்தது. இருந்தாலும் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நல்ல பாட்னர்ஷிப் அமைக்க முடிந்ததால் எங்களால் இலக்கினை துரத்த முடிந்தது. இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கும், பவுலர்களுக்கும் இடையே சரியான போட்டி நிலவியது. இருந்தாலும் நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்.

இதையும் படிங்க : IND vs AUS : இவருக்கு 19வது ஓவரில் கண்டம், கேரியரில் மோசமான சாதனை படைத்த புவி – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

அதோடு விக்கெட்டுகளை இழுந்தாலும் ரன் ரேட்டை குறைய விடக்கூடாது என்பதனால் அதிரடியாக எங்களது பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நாங்கள் பெற்ற இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement