ஐ.பி.எல் தொடரில் தேர்வாகாதது குறித்து மனம்திறந்து உண்மையை கூறிய – ஆரோன் பின்ச்

- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடத்தப்பட்டு வரும் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.அதில் பங்கெடுத்த அணிகள் தங்கள் கை வசம் இருந்த இருப்பு தொகையை கொண்டு அதற்கேற்ப வீரர்களை வாங்கினர்.

ipl trophy

- Advertisement -

பல்வேறு இளம் வீரர்கள் நல்ல தொகைக்கு ஏலம் சென்ற நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச்சை எந்த அணியும் வாங்காமல் அதுர்ச்சி அளித்தது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அவரது மோசமான பெர்பார்மன்ஸே முழுக்க முழுக்க காரணமாக அறியப்படுகிறது. இதற்கு முன்னர் பல்வேறு சீசன்களில் பல்வேறு அணியுடன் பின்ச் ஆடியுள்ளார்.

2017 முதல் அவரது ஆட்டம் சொல்லி கொள்ளும் அளவில் இல்லை. 2017ஆம் ஆண்டு அவரது சராசரி பேட்டிங் சகவிகிதம் 26 , 2018ஆம் ஆண்டு அவரது சராசரி பேட்டிங் சகவிகிதம் 18, 2019ஆம் ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் ஆடாத பின்ச் சென்ற ஆண்டு ஆர்சிபி அணிக்காக ஆடினார்.போன ஆண்டும் அவரது மோசமான ஃபாரம் தொடர அவரை பெங்களூரு அனி தனது அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.

finch

இதன் காரணமாகவே யாரும் விலை கொடுத்து வாங்கவில்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் பின்ச்சே இதை பற்றி மனம் திறந்துள்ளார். இந்தாண்டு என்னை எந்த அணியும் வாங்காது என்று முன்பே எனக்கு தெரியும். சில காலமாக நான் சரியாக பெர்பார்ம் செய்யவில்லை. எனவே இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.

finch 1

மேலும் என் குடும்பத்துடன் கொஞ்ச காலம் தனியாக நேரம் கழிக்க உள்ளேன்.அப்படி எனக்கு கிடைத்த வாய்ப்பாக இதை நான் எடுத்து கொள்வேன்.மேலும் என் மீதுள்ள தவறை இனி வரும் காலங்களில் நான் சரி செய்வேன்.இவ்வாறு பின்ச் தனது வருத்தம் நிறைந்த பதிலை தெரிவித்துள்ளார்.

Advertisement