இவரது அதிரடியை நேரில் பார்த்து மிரண்டு போயிட்டேன். என்னா ஹிட்டர்ங்க இவரு – ஆரோன் பின்ச் வியப்பு

Finch
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 28 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

RCBvsKKR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிவிலியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கோலி 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார். துவக்க வீரர்களான பின்ச் மற்றும் படிக்கல் ஆகியோர் முறையே 47 மற்றும் 32 ரன்களை குவித்தனர் .அதன்பின்னர் 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை மட்டுமே அடித்தது.

கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக தொடக்க வீரர் கில் 34 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்றவர்கள் யாரும் 20 ரன்களை கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க.து பெங்களூர் அணி சார்பாக வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசி நான்கு ஊர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், மோரிஸ் 4 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

abd 1

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பெங்களூரு அணியின் துவக்க வீரர் பின்ச் கூறுகையில் : ஏபி டி வில்லியர்ஸ் ஸ்பெஷல் பேட்ஸ்மேன். இவரை போன்ற பேட்ஸ்மேன்கள் பந்தை விளாசும்போது மைதானத்தில் எதுமே இல்லாத போதும் எல்லாவற்றையும் செய்ய முடியும். அவர் விளாசும்போது அவரது அதிரடி எதிரணிக்கு நெருக்கடியை கொடுக்கும். இந்த கடினமான ஆடுகளத்தை கூட விளையாட எளிதானது என்பதுபோல் மாற்றிவிட்டார்.

abd

ஒரு கட்டத்தில் நாங்கள் 180 ரன்கள் சிறந்த ஸ்கோர் என நினைத்தோம். ஆனால், 194 ரன்கள் குவித்து விட்டோம்’’ என்றார். டி வில்லியர்ஸ் 33 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 73 ரன்கள் விளாசினார். விராட் கோலி – டி வில்லியர்ஸ் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் குவித்தது.

Advertisement