விராட் கோலியை தொடர்ந்து டி20 போட்டியில் அதிவேக சாதனையை படைத்த பின்ச் – விவரம் இதோ

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டி20 போட்டியில் ஒரு அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Finch

அதாவது டி20 போட்டிகளில் அதிவேக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் பட்டியலில் இந்திய வீரர் கேப்டன் கோலி 56 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து தற்போது தனது 62 ஆவது இன்னிங்சில் விளையாடிய பின்ச் டி20 சர்வதேச போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் 10 பேட்ஸ்மேன்கள் டி20 போட்டிகளில் 2000 ரன்களை குவித்துள்ளனர் அதில் குறிப்பாக கோலி, ரோகித் சர்மா மோர்கன், டேவிட் வார்னர் ஆகியோர் உள்ளனர். அவர்களை தொடர்ந்து பத்தாவது வீரராக டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களைக் குவித்த வீரராக ஆரோன் பின்ச் இணைந்துள்ளார்.

Finch

பிஞ்சின் இந்த சாதனைக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் தற்போது விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் விளையாட இருக்கும் பின்ச் துவக்க வீரராக அசத்துவார் என்று எதிர்பார்க்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -