- Advertisement -
ஐ.பி.எல்

அவருக்கு 23 கோடிலாம் ரொம்ப அதிகம்.. அவரை டீமை விட்டு வெளிய அனுப்புங்க – ஆரோன் பின்ச் கருத்து

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முன்னேற்பாடுகள் தற்போதே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வரும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும், தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலின் வெளியிட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கே.கே.ஆர் அணியில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் : ஆரோன் பின்ச்

இதன் காரணமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலும் தயார் செய்து வருகிறது. மேலும் இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ட்ரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் அதன் வாயிலாகவும் சில வீரர்களின் அணி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதே போன்று கடந்த 2024-ம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா அணி இந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த ஆண்டுக்கு முன்னதாக தங்களது அணியை பலப்படுத்தும் நோக்கில் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்ததற்கு ஏற்றார் போல் அவர் செயல்படவில்லை என்றும் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவர் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஆரோன் பின்ச் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கொல்கத்தா அணி 23 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுத்திருந்தது. ஆனால் அவர் இந்த ஆண்டு 11 ஆட்டங்களில் விளையாடி142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவருக்கு இவ்வளவு பெரிய தொகை என்பது ரொம்ப அதிகம்.

இதையும் படிங்க : வாய்ப்புகளை இலவசமாக வழங்க.. அவர் ஒன்னும் கெளதம் கம்பீருக்கு மாமன் இல்லை.. பிஸ்லா பதிலடி

எனவே அவரை விடுவித்து மீண்டும் மினி ஏலத்தின் போது ஓரளவு நல்ல தொகைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளலாம். வெங்கடேஷ் ஐயரை விடுவிக்கும் பட்சத்தில் அவர்கள் பெரிய தொகையுடன் மினி ஏலத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஆரோன் பின்ச் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -