ஐ.பி.எல் தொடரில் 8 ஆவது அணிக்காக விளையாடி விசித்திர சாதனை படைக்கவிருக்கும் வீரர் யார் தெரியுமா ? – விவரம் இதோ

IPL
- Advertisement -

இதுவரை ஐபிஎல் தொடர் 12 ஆண்டுகள் நடைபெற்று இருக்கிறது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறையும், கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த அணிகள் பல முறை வெற்றி பெற்றது போல் ஒரு சில வீரர்கள் பல அணிகளுக்கு வருடாவருடம் மாறி மாறி விளையாடி இருக்கின்றனர்

SRH

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் மட்டுமே நிலைப்பு தன்மையுடன் 7 முதல் 8 வீரர்களை வருடாவருடம் தக்க வைக்கும். ஆனால் மற்ற அணிகள் எல்லாம் சரியாக ஆட முடியாமல் வருடாவருடம் அணிகளை மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த சுழற்சி முறையில் ஒரு சில வீரர்களும் அணிகளை மாற்றிக்கொண்டு விளையாடியிருக்கிறார்கள்.

ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட வெற்றி பெறாத மூன்று அணிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். இந்த முறை விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ் ஆகியயோரை தவிர அணி மிகவும் புதுமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது

finch

இதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துவக்க அதிரடி வீரர் ஆரோன் பின்ச் ஏலத்தில் வாங்கபட்டுள்ளார். குறிப்பாக ஆரோன் பின்ச் ஆடுவது இது 8வது அணியாகும். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இவர் களம் இறங்கிவிட்டால் இதுவரை எட்டு அணிகளில் ஆடிய ஒரே வீரர் என்ற பெருமையை பெறுவார்.

- Advertisement -

Finch

இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அனைத்து அணிகளிலும் ஆடியிருக்கிறார் ஆரோன் பின்ச்

இதுவரை ஆரோன் பின்ச் ஆடிய அணிகளின் பட்டியல்

- Advertisement -

2010 – ராஜஸ்தான் ராயல்ஸ்

2011-2012 – டெல்லி டேர்டெவில்ஸ்

- Advertisement -

2013 –  புனே வாரியர்ஸ் இந்தியா

2014 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2015 – மும்பை இந்தியன்ஸ்

2016-2017 – குஜராத் லயன்ஸ்

2018 – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2020 – ஆர்சிபி

Advertisement