கண்ணில் ஆப்ரேஷன் செய்து கொண்ட ஆஸி வீரர். அதுதான் ஐ.பி.எல் ல சொதப்ப காரணமாம் – யார் தெரியுமா ?

indvsaus
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனக்கு சரியாக கண் தெரியவில்லையென்றும், அதிலிருந்து மீள்வதற்காக தற்போதுதான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளேன் என்றும் தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஏழாவது டி20 உலக கோப்பை தொடருக்காக ஆயத்தமாகி வருகிறது ஆஸ்திரேலிய அணி. அதற்காக அதிகமான டி20 போட்டிகளில் விளையாட முடிவெடுத்த அந்த அணியானது, அதன் முதல்படியாக அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாட அந்த நாட்டிற்கு செல்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் பத்திரிக்கை ஒன்றிர்கு அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது விளக்கொளியில் என்னால் பந்தை சரியாக காண முடியவில்லை. அனைத்துமே மங்கலாக தெரிந்தது. ஒரு கிரிக்கெட் வீரனாக நான் நிறைய பகலிரவு போட்டிகளில் விளையாட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக கான்டக்ட் லென்ஸ் பொருத்திப் பார்த்தேன்.

ஆனால் என்னுடைய கண்களில் அது சரியாக பொருந்தவில்லை. அதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது என்னால் பந்தை சரியாக பார்க்க முடிகிறது என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின் போது அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

finch 1

ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடவில்லையென்றாலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பேட்டியில் மேலும் பேசிய அவர் கூறியதாவது, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பங்களதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்கள், எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

finch

அந்த அணியின் முன்னனி வீரர்களான டேவிட் வார்னர், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக இந்த இரு தொடர்களில் இருந்தும் விலகியுள்ளதால், பல இளம் வீரர்களுக்கு அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement