உலகமே உற்று பார்க்கும் ஐபிஎல் – பிபிஎல் போட்டியின் வித்யாசத்தை கூறிய கிரிக்கெட் வீரர்

IPL
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிஞ்ச் உலகிலுள்ள பெரும்பாலான டி20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்.பல நாடுகளில் டி20லீக் போட்டிகள் நடைபெற்றாலும் ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் தொடரும், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் உலகப்புகழ்பெற்றவை.
aaron

உலகம் முழுதிலும் இந்த இரண்டு லீக் தொடருக்கு தான் உலகளவில் ரசிகர்களும் அதிகம், எதிர்பார்ப்பும் அதிகம்.இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் பிஞ்ச் பிக்பாஷ் லீக்கிற்கும் ஐபிஎல் லீக்கிற்கும் இடையிலான ஒற்றுமையையும், வித்தியாசத்தை விளக்குகின்றார்.

- Advertisement -

இரண்டு லீக் தொடர்களிலுமே வீரர்களுக்கான நெருக்கடிகள் அதிகம். அதிகப்படியான திறமைகளை வெளிப்படுத்தியே ஆக வேண்டிய தொடர்கள் இரண்டுமே. அதேவேளையில் வீரர்களுக்கான அதிகப்படியான பாப்புலாரிட்டியும் இந்த தொடர்களில் அதிகளவு கிடைக்கும் என்கிறார்.ஐபிஎல் பொறுத்தவரை ஆடுகளங்களும் பெரும்பாலும் பந்துகள் மேலே எழும்பும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும் என்கிறார் பிஞ்ச்.
finch

பிஞ்ச் இந்த ஐபிஎல்-இல் பஞ்சாப் அணிக்காக 6.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இதன் முந்தைய ஐபிஎல் போட்டிகளில் குஜராத் லயன்ஸ்,டெல்லி டேர்டெவில்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,புனே வாரியர்ஸ்,ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement