இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அசத்தியதன் மூலம் வரலாற்று சாதனையை நிகழ்த்திய – 43 வயது ஓமன் வீரர்

Aamir Kaleem
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் மோதிய வேளையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.

43 வயதில் இந்திய அணிக்கு எதிராக சாதனை நிகழ்த்திய ஓமன் வீரர் :

அதனபடி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவிக்க அடுத்ததாக 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் அணி 20 ஓவர்களின் முடிவில் 167 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஓமன் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய ஆமீர் கலீம் அதிகபட்சமாக 46 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 64 ரன்களை குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த அரைசதத்தின் மூலம் இந்திய அணிக்கு எதிராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

79 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்த 43 வயதான ஓமன் வீரர் குறித்த விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஓமன் அணிக்காக நேற்று தனது 43-வது வயது 303-வது நாளில் அரைசதம் அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு முன்பு 1946-ஆம் ஆண்டு முன்னாள் இங்கிலாந்து வீரர் வாலி ஹேமண்ட் தனது 43 வது வயது 31 நாட்களில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். அவரது அந்த சாதனையை தற்போது 79 ஆண்டுகள் கழித்து நேற்று ஆமிர் கலீம் முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா இப்படி ஆடுறது தான் இந்திய அணிக்கு நல்லது.. அவரை விமர்சிக்காதீங்க – அபினவ் முகுந்த் கருத்து

பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த ஆமீர் கலீம் கிரிக்கெட் கனவோடு சாதிக்க வேண்டும் என்று ஓமன் நாட்டிற்கு குடிபெயர்ந்து தற்போது ஓமன் அணிக்காக 43 வயதிலும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சர்வதேச போட்டிகளில் 30 வயதை கடந்தாலே தடுமாற்றத்தை சந்திக்கும் வீரர்கள் மத்தயில் 43 வயதில் இப்படி ஒரு சாதனையை ஓமன் வீரர் நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தயிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement