ஒன்னு இல்ல.. ரெண்டு பேர் வெயிட் பண்றாங்க.. சுப்மன் கில்லை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ

Aakash Chopra
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் நாளை அக்டோபர் 29-ஆம் தேதி கான்பெர்ரா நகரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியானது இந்த டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

சுப்மன் கில்லின் இடத்திற்கு காத்திருக்கும் 2 வீரர்கள் : ஆகாஷ் சோப்ரா

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனான சுப்மன் கில் தனது துவக்க வீரர்களுக்கான இடத்தில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்காவிட்டால் எதிர்வரும் காலத்தில் அவரது துவக்க வீரருக்கான இடத்திற்கு ஆபத்து ஏற்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரை எச்சரிக்கும் வகையில் ஒரு கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்த பட்சத்தில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக களமிறங்கி கடந்த ஆண்டு மட்டும் மூன்று சதங்களை அடித்து அற்புதமான பார்மில் இருந்தார். ஆனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த சுப்மன் கில்லுக்கு டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவி வழங்கியதோடு மீண்டும் துவக்க வீரருக்கான இடமும் வழங்கப்பட்டது.

ஆனால் ஆசிய கோப்பை தொடரின் 7 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 21 சராசரியுடன் 127 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார். இதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : சுப்மன் கில்லுக்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் ஒருநாள் போட்டியில் அவர் கேப்டனாக இருப்பதனால் ரன் குவிப்பதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

- Advertisement -

ஆனால் டி20 போட்டிகளை பொருத்தவரை அவரது இடம் ஆபத்தான நிலையிலே உள்ளது. ஏனெனில் சஞ்சு சாம்சன் ஏற்கனவே துவக்க வீரராக களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேளையில் அவரது இடத்தை பறித்து தற்போது சுப்மன் கில்லுக்கு நிர்வாகம் வழங்கியுள்ளது. எனவே சுப்மன் கில் அந்த இடத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அது சஞ்சு சாம்சனுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக மாறும். அதோடு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : இந்திய வீரரான அவர் மட்டும் பார்ம்ல இருந்தா ஜாஷ் ஹேசல்வுட்டை பொளந்துடுவாரு – அபிஷேக் நாயர் கருத்து

அவரும் டி20 போட்டிகளுக்கான துவக்க வீரருக்கான இடத்தில் போட்டியில் தான் இருக்கிறார். இப்படி சஞ்சு சாம்சன் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் திறமையுடன் துவக்க வீரருக்கான இடத்தில் காத்திருக்கும் வேளையில் சுப்மன் கில் இந்த தொடரில் சொதப்பினால் அவரது இடத்திற்கு ஆபத்து ஏற்படும் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement