ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கும் அந்தத் தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது. அதற்கு முன்பாக விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்று சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடத் தயாராக இருக்கிறோம் என்பதைக் காண்பித்தது.
இந்நிலையில் இந்திய அணியில் அனைத்தும் நன்றாக இருப்பது போல் வெளிப்பார்வைக்கு மட்டுமே தெரிவதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாததால் இந்தியாவின் பவுலிங் துறை பலவீனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே பேட்டிங் தான் தற்போதைய அணியின் பலமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
டாஸ் வென்றால்:
அதனால் டாஸ் வென்றால் துபாயில் இந்தியா முதலில் பவுலிங் செய்து பின்னர் சேசிங் செய்வதே வெற்றி பெறுவதற்கான வழி என்றும் அவர் சிறிய ஆலோசனையை தெரிவித்துள்ளார். அது பனியின் தாக்கத்தையும் தவிர்க்கும் என்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “உங்களுடைய பலம் எதுவோ அதை நீங்கள் இரண்டாவதாக செய்ய வேண்டும் என்று ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு விதிமுறை இருக்கிறது”
“அதன் படி உங்களுடைய பவுலிங் நன்றாக இருந்தால் அதைப் பின்னர் செய்யுங்கள். உங்களது பேட்டிங் நன்றாக இருந்தால் அதைப் பின்னர் செய்யுங்கள். அந்த வகையில் இந்த இந்திய அணியில் பேட்டிங் நன்றாக இருக்கிறது. நமது பந்து வீச்சில் 5 ஸ்பின்னர்கள் மற்றும் நிறைய வேரியசன்கள் இருப்பதாக நாம் சொல்கிறோம். ஆனால் நாம் நேர்மையாக இருக்க வேண்டுமெனில் நமது பந்து வீச்சில் பிரச்சனை இருக்கிறது”
பேட்டிங் தான் பலம்:
“பேட்டிங் தான் நம்முடைய பலம். அதனால் போட்டியை வென்று கொடுக்கக்கூடிய அழுத்தம் பேட்ஸ்மேன்கள் மீது இருக்கும். எனவே கண்டிப்பாக இந்தியா இரண்டாவதாக பேட்டிங் செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் டாஸ் வென்றால் முதலில் பவுலிங் செய்ய வேண்டும். பனியால் ஏற்படும் தாக்கமும் ஆபத்தும் இரண்டாவது இன்னிங்ஸில் தான் இருக்கும்”
இதையும் படிங்க: இதுவே சரியான முடிவல்ல.. இதுல வருணுக்காக அவரை கழற்றி விட்றாதீங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை
“அப்போது நீங்கள் பேட்டிங் தான் செய்ய வேண்டும். கையில் பந்தை வைத்திருக்கக் கூடாது. இந்தியா கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் சேசிங் செய்ய வேண்டும். அதுவும் துபாய் மைதானத்தில் இருக்கும் பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார். இதை அடுத்து இந்தியாவின் முதல் போட்டி பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது.



