இதுவே சரியான முடிவல்ல.. இதுல வருணுக்காக அவரை கழற்றி விட்றாதீங்க.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

Aakash Chopra 2
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சில தேர்வுகள் விமர்சனங்களை எழுப்பின. முதலில் அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அந்த சூழ்நிலையில் கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வாலை அணியிலிருந்து நீக்கிய அஜித் அகர்கர், கௌதம் கம்பீர் ஆகியோர் வருண் சக்கரவர்த்தியை சேர்த்துள்ளார்கள். ஏற்கனவே 4 ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில் அவரையும் சேர்த்து 5 ஸ்பின்னர்கள் எதற்கு? என்பது பல ரசிகர்கள் மற்றும் சில முன்னாள் வீரர்களின் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் துபாய் மைதானம் சென்னை போல பெரியளவில் சுழலுக்கு உதவி செய்யாது.

- Advertisement -

5 ஸ்பின்னர்கள் எதற்கு:

இது போக அனுபவமிக்க முஹமது சிராஜை தேர்ந்தெடுக்காத கௌதம் கம்பீர் கொல்கத்தா ஐபிஎல் அணியில் அசத்தினார் என்பதற்காக ஹர்ஷித் ராணாவுக்கு திடீரென அறிமுக வாய்ப்பை வழங்கி சாம்பியன்ஸ் கோப்பையிலும் தேர்ந்தெடுத்துள்ளார். இந்நிலையில் துபாயில் 5 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியான முடிவாக இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்திக்காக பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவை கழற்றி விட்டு விடாதீர்கள் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கான காரணம் பற்றி ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் கூறியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்தியா 5 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்துள்ளது. சார்ஜா மைதானம் தான் இந்த இந்திய அணிக்கு பொருத்தமானதாக இருக்கும்”

- Advertisement -

குல்தீப் முக்கியம்:

“துபாயில் சுழலை வைத்து வெல்ல முடியுமா? என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஏனெனில் அங்குள்ள மைதானம் ஸ்பின்னர்களுக்கு எப்போதும் பெரிய உதவிகள் செய்ததில்லை. அது போன்ற சூழ்நிலையில் வருண் சக்கரவர்த்திக்காக குல்தீப் யாதவ் பெஞ்சில் அமர வைக்கப்பட மாட்டார் என்று நான் உண்மையாக நம்புகிறேன்”

இதையும் படிங்க: அதையும் மிஸ் பண்ணிட்டாங்க.. ரோஹித், கோலி, ஜடேஜாவை நாம ஒன்னா பார்ப்பது இதுவே கடைசி.. ஆகாஷ் சோப்ரா

“தேவைப்பட்டால் அந்த இருவரையும் விளையாட வையுங்கள். ஆனால் குல்தீப் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் இப்படி சொல்லக் காரணம் என்னவெனில் வருண் ஐசிசி தொடர்களில் அசத்திய அனுபவம் கொண்டிருக்கவில்லை. ஆனால் 2023 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகள் எடுத்து ஃபைனல் செல்ல உதவிய குல்தீப் 2024 டி20 உலகக் கோப்பையில் 10 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement