தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக முதல் இன்னிங்சில் வெறும் 3 பந்துகளை மட்டுமே சந்தித்து 4 ரன்களில் இருந்த போது மைதானத்திலிருந்து ஓய்வறைக்கும் திரும்பினார். இந்திய அணியின் மருத்துவக்குழு உதவியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரது கழுத்து வலி சரியாகவில்லை.
சுப்மன் கில்லின் இடத்தில் அவர் விளையாடனும் : ஆகாஷ் சோப்ரா
இதன் காரணமாக இரண்டாம் நாள் முழுவதுமே அவர் சிரமத்தை சந்தித்திருந்தார். அதன் பின்னர் போட்டியின் இரண்டாம் நாள் மாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் மேற்கொண்டு இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது சிகிச்சையில் இருந்து வெளியேறிய அவர் வீடு திரும்பிய வேளையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி கெளஹாத்தி நகரில் நடைபெற இருக்கும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சுப்மன் கில்லுக்கு பதிலாக யார் இரண்டாவது போட்டியில் விளையாடப் போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இருக்கும் வேளையில் அவர்களை தாண்டி ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில் இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
என்னை பொறுத்தவரை அடுத்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தான் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் சுப்மன் கில் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான். ஒருவேளை அவர் விளையாடவில்லை எனில் அவரது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வேண்டும். ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியில் 6 இடது கை வீரர்கள் தற்போதைய பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தரின் இந்த வளர்ச்சியால் தான் நாங்கள் ரூதர்போர்டை வெளியேற்றினோம் – பார்த்திவ் படேல் கருத்து
இந்நிலையில் மேலும் ஒரு இடதுகை ஆட்டக்காரராக சாய் சுதர்சனையோ அல்லது படிக்கல்லையோ சேர்த்தால் ஏழாவது இடது கை வீரராக மாறிவிடும். எனவே அதை தவிர்க்க வலதுகை ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்க வேண்டும். அவர் தற்போது மிகச் சிறப்பான பார்மில் விளையாடி வருவதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



