இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதை முடித்துக்கொண்டு துபாயில் நடைபெறும் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பர்களாக விளையாடுவதற்கு கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்று விளையாடப் போவது யார்? என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதில் ரிசப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தியதில்லை என்றாலும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினர். அது போக இந்திய பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்பதால் அவர் விளையாடுவதற்கு வாய்ப்பு காணப்படுகிறது.
ராகுல்ன்னா இளிச்சவாயா:
இந்நிலையில் ராகுல் என்ற பெயரை வைத்திருந்தாலே டிராவிட் போல ஓப்பனிங், ஒன் டவுன், மிடில் ஆர்டர், கீப்பிங் போன்ற இந்திய அணிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டுமா? என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். எனவே ராகுல் தான் விக்கெட் கீப்பராக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்திய அணியில் 2 நிலைகள் இருக்கின்றது. ஒன்று கில், ரோஹித், கோலி, ராகுல், பாண்டியா உட்பட டாப் ஆர்டரில் அனைவரும் வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். எனவே உங்களுக்கு ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவையில்லையா? என்று நினைக்கலாம். அப்படி நினைப்பவர்கள் ரிஷப் பண்ட் விளையாட வேண்டும் என்று சொல்வார்கள்”
சென்னையை மறக்காதீங்க:
“ராகுலுக்கு சாதகமாக அவர் செய்தத் தவறான விஷயங்கள் செல்லலாம். ராகுல் என்ற பெயரைக் கொண்டிருப்பதற்காக மட்டும் நீங்கள் அவரை தொடர்ந்து அடிக்க முடியாது. அவரை வைத்து நீங்கள் கீப்பிங், ஒன் டவுன் அல்லது மிடில் ஆர்டரில் விளையாடுவது, கூல்ட்ரிங்ஸ் தூக்குவது போன்ற அனைத்து வேலைகளையும் செய்ய முடியாது. ஏனெனில் கடந்த உலகக் கோப்பையில் அவர் நன்றாக விளையாடினார்”
இதையும் படிங்க: இதுல கொஞ்சம் முன்னேறினா.. நீங்க தான் அடுத்த சேவாக்.. அபிஷேக்கிற்கு ஹர்பஜன் முக்கிய அட்வைஸ்
“சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. 25/3 என இந்தியா சரிந்த போது சிறப்பாக விளையாடிய அவர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் ஃபைனலில் அவர் மெதுவாக விளையாடியதற்காக விமர்சனங்கள் எழுந்தன. ஒருவேளை சென்னையில் அவர் அவுட்டாகியிருந்தால் நாம் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் போயிருக்கலாம். அந்த வகையில் எந்த தவறும் செய்யாத ஒருவரை நாம் ஏன் நீக்க வேண்டும்? ரிஷப் பண்ட் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தவில்லை. ராகுல் தான் முன்னணியில் இருக்கிறார்” என்று கூறினார்.