- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்படும் இடம் சரியில்லை – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் பொதுவாக நம்பர் 3 அல்லது நம்பர் 4 ஆப்ஷனில் பேட்டிங் ஆடக்கூடிய வீரர் ஆவார். ஐபிஎல் போட்டிகளில் பொதுவாக அவர் அந்த இடங்களில் மட்டும்தான் பேட்டிங் ஆடுவார்.இந்திய அணிக்காக கூட நம்பர் 3 இடத்தில் இதுவரை 8 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தமாக 250 ரன்களை குவித்துள்ளார். நம்பர் 3 பொசிசனில் இவரது பேட்டிங் அவரேஜ் 50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 151 ஆகும்.

ஆனால் தற்பொழுது நடந்து முடிந்துள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஐயருக்கு நம்பர் 3 மற்றும் நம்பர் 4 இடங்களில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இது சம்பந்தமாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார். இந்தியா ஆடிய அனைத்து டி20 போட்டிகளில் டாப் ஆர்டர் வீரர்கள் அதிக அளவில் இருந்ததால் , விராட் கோலி போன்ற வீரருக்கே அவரது ஸ்பாட்டில் அவரால் ஆட முடியவில்லை. அதுதான் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் நடந்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் ஐயர் முதல் டி20 போட்டியில் நம்பர் 5 இடத்தில் இறங்கி ஆடினார். மொத்தமாக 48 பந்துகளை மட்டுமே பிடித்து 67 ரன்களை குவித்தார். இந்திய அணியின் ஸ்கோர் ஆன 124 ரன்களில் இவர் எடுத்த 67 ரன்கள் தான் தனிப்பட்ட வகையில் மிக அதிகமான ஸ்கோர் ஆகும். இதனை அடுத்து நான்காவது டி20 போட்டியில் இவர் நம்பர் 6 இடத்தில் களம் இறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் இறங்கி 18 பந்துகளில் 37 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார்.

ஐயருக்கு இது ஏத்த பேட்டிங் ஸ்பாட் அல்ல. இருப்பினும் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இது தற்காலிகமான பேட்டிங் வீயுகமே , ஸ்ரேயாஸ் ஐயர் நிரந்தரமாக இந்த ஸ்பாட்டில் ஆட போவதில்லை. எனவே முடிந்தவரையில் கிடைக்கும் ஸ்பாட்டில் இறங்கி நன்றாக விளையாடுவதே முக்கியம் என்றும் அப்படிப் பார்க்கையில் நம்பர் சிக்ஸ் பேட்டிங் ஆப்ஷன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிறந்த பேட்டிங் ஆப்ஷன் ஆக எனக்கு தெரிகிறது என்றுன்று ஆகாஷ் சோப்ரா கூறி முடித்தார்.

ஏற்கனவே இந்திய அணியின் டாப் ஆர்டர் சிறப்பாக இருந்தும் மிடில் ஆர்டரில் ஏகப்பட்ட குழப்பம் இருக்கும் வேளையில் தொடர்ந்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் மாற்றப்பட்டு வருவது சற்று வருத்தமான விடயமாக இருந்தாலும் பலமான வீரர்கள் பலர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by