ஆர்.சி.பி அணி இந்த 2 பேரை மட்டும் ரிலீஸ் பண்ணா போதும்.. வேறு எந்த மாற்றமும் வேண்டாம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash Chopra and RCB
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது எதிர்வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சி.பி அணி இந்த 2 பேரை விடுவித்தால் போதும் : ஆகாஷ் சோப்ரா

இதன் காரணமாக தற்போது அடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும், வெளியேற்ற விரும்பும் வீரர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தங்களது அணியை மேலும் பலப்படுத்தும் வகையில் சில முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஆர்சிபி அணியில் இருந்து இரண்டு வீரர்களை மட்டும் வெளியேற்றினால் போதும் என்றும் மற்றபடி ஆர்சிபி அணி மிகச் சிறப்பான அணியாகவே இருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஆர்சிபி அணி தற்போது மிக பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது. என்னைக் கேட்டால் அந்த அணி இரண்டு வீரர்களை மட்டுமே விடுவிக்கலாம். ஏனெனில் ஆர்சிபி அணி கடந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இதன் காரணமாக முடிந்தவரை பெரும்பாலான வீரர்களை விடுவிக்காமல் அனைவரையும் தக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

அதே வேளையில் அந்த அணியில் விளையாடி வரும் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ரசிக் சலாம் ஆகிய இருவரையும் விடுவிக்கலாம். ஏனெனில் லியாம் லிவிங்ஸ்டன் இந்த ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதேபோன்று பந்துவீச்சில் ஹேசல்வுட், புவனேஸ்வர் குமார், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் இருப்பதன் காரணமாக கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை தற்காப்புக்காக வாங்கலாம். எனவே ரசிக் சலாமை விடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : 95/4 டூ 299/5.. வெறும் 6 ரன்ஸ்.. போராடிய இலங்கையை சாய்த்த பாகிஸ்தான்.. 36 வருட சாதனை வெற்றி

அவரை விடுவித்தால் ஆர்.சி.பி அணிக்கு 6 கோடி கிடைக்கும். அதேபோன்று லிவிங்ஸ்டனை விடுவித்தால் 8 கோடி ரூபாய் கிடைக்கும் என்று நினைக்கிறேன். எனவே அவர்கள் இருவரையும் வெளியேற்றிவிட்டு ஒரு பேட்ஸ்மேன் மற்றும் ஒரு பவுலரை தேர்ந்தெடுத்தால் ஆர்.சி.பி அணி மேலும் பலமடையும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement