இத்தனை வீரர்கள் சிறப்பாக விளையாடியும் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றாததுக்கு இதுவே காரணம் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Kohli
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

kohli

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் பெங்களூரு அணியின் தோல்வி குறித்து சில விடயங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து பல வெற்றிகளை குவித்த கோலி பெங்களூரு அணிக்காக 2012 ஆம் ஆண்டு முதல் தலைமை தாங்கி இதுவரை வழிநடத்தி வருகிறார் ஆனாலும் இவர் தலைமையில் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

Kohli 1

மேலும் 2016 ஆம் ஆண்டு இவரது தலைமையில் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குச் சென்றும் தோல்வி அடைந்தது. 110 போட்டிகளில் இதுவரை தலைமை ஏற்று விளையாடியுள்ள கோலிக்கு 49 வெற்றிகளும், 55 தோல்விகளும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தோல்விக்கு காரணமாக அமைந்த சில விடயங்களை ஆகாஷ் சோப்ரா சுட்டி காட்டியுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : ஆர்சிபி அணியின் தோல்விக்கு அந்த அணியில் சிறந்த வீரர்களை தேர்வு செய்யாததே ஒரு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார். ஆர்சிபி அணியின் பேட்டிங் எப்போதும் சிறப்பாக இருந்த போதிலும் பவுலிங் வரிசையை அவர்கள் சிறப்பாக வைத்திருக்கவில்லை சாஹல் தவிர மற்றபடி வேறு எந்த பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படவில்லை.

Kohli

எப்போதுமே பெங்களூரு அணியின் பேட்டிங் சிறப்பாகவும், பவுலிங் மிக மோசமாக இருந்து வருகிறது. கடைசி நேரங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் சிறப்பாக பந்துவீசுவது இல்லை .இதனால் பல போட்டிகளில் அவர்கள் இறுதி நேரத்தில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் மீண்டும் அடைந்த தோல்விக்கு பந்துவீச்சு வரிசை காரணம் என்றும் சிறந்த வீரர்களை அணிக்கு தேர்வு செய்யாததுமே காரணம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடக்கத்து.

Advertisement