ரிஷப் பண்ட் செய்யமுடியாததை இவர் செய்து காட்டுவார். அவரை நீக்கவேண்டிய அவசியமில்லை – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Chopra
- Advertisement -

ஐசிசி நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று முன்னாள் வீரர்களும் இந்திய ரசிகர்களும் கருத்து கூறி வருகின்றனர். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகவே பேட்டிங்கில் சொதப்பி வரும் சேட்டேஸ்வர் புஜாரா அதிரடியாக அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவிடம், புஜாரவுடன் சேர்த்து ரஹானேவும் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்படுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

kohli rahane

- Advertisement -

அதற்கு பதிலளித்த அவர், இருவருமே அணியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்று கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் கூறியதாவது, என்னைப் பொறுத்தவரை அடுத்து வரும் இங்கிலாந்து தொடரானது அவர்கள் இருவருக்கும் சிறப்பானதாக அமையும். நிச்சயம் அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவார்கள். அதே சமயம் அவர்கள் விளையாடும் விதமும் நமக்கு முக்கியமான ஒன்றாகும். ரிஷப் பன்ட் செய்ய தவறுவதை புஜாரா செய்து காட்டுவார்.

விராட் கோஹ்லியால் முடியாததை ரஹானே செய்வார். இதற்கெல்லாம் அவர்களுடைய விளையாடும் முறைதான் காரணம். அவர்கள் மெதுவாக ஆடுகிறார்கள் என்பதால் அவர்களின்மேல் விராட் கோஹ்லி கருத்து வேறுபாட்டுடன் இருக்காலாம். அதற்காக அவர்களை அணியில் இருந்து வெளியேற்றும் முடிவை அவர் எடுக்க மாட்டார் என்று தான் நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து விராட் கோஹ்லி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றிக் கொள்ளவிருக்கிறார் என்றும், புஜாராவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அந்த பேட்டிங் வரிசையில் அவர் விளையாடப்போகிறார் என்றும் இந்திய ரசிகர்கள் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pujara

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியானது ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடருக்கு முன்பாக இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணயானது, இந்த போட்டிகள் முடிந்த பின்னர்தான் எந்த ஒரு முடிவையும் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement