எத்தனை முறை அவுட் ஆனாலும் திருந்தமாட்டார். இப்படியே போனா அவ்வளவுதான் – டெல்லி வீரரை எச்சரித்த சோப்ரா

Chopra

ஐ.பி.எல் தொடரில் கடந்த இரண்டு வருடங்களாக கட்டமைக்கப்பட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது அதன் பலனை அனுபவித்து வருகிறது. தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்த வருட புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி கிட்டத்தட்ட பெற்றுவிட்டது என்றே கூறலாம்.

dc

இதற்கு இந்த அணியின் மொத்த வீரர்களும் தான் காரணம் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்களும் ககிசோ ரபடா, அமித் மிஸ்ரா, ரவிசந்திரன் அஸ்வின் போன்ற பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் ஷிகர் தவான் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசினார்.

இந்த இரண்டு சதங்களின் போதும் எதிர்முனையில் ஆடிக் கொண்டிருந்த இளம் வீரர் ப்ருதிவி ஷா பொறுப்பில்லாமல் ஆடி தனது விக்கெட்டை இழந்தார். அதிலும் கடந்த நான்கு போட்டிகளில் இரண்டு முறை டக் அவுட் ஆகி விட்டு மொத்தம் 11 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் கடுப்பான முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா ப்ரித்வி ஷாவின் பேட்டிங் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Shaw-1

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா கூறுகையில்… எத்தனை முறை ஆட்டமிழந்தாலும் தனது தவறை திருத்திக்கொள்ள முயலவில்லை. ஷிகர் தவான் அடித்து ஆடிக் கொண்டிருக்கும் போது இவருக்கு என்ன அவசரம்? அவருக்கு உறுதுணையாக ஆடிக்கொண்டிருந்தால் இவரும் தனது விக்கெட்டை இழக்காமல் அரைசதம் அடித்து இருக்கலாம்.

- Advertisement -

Shaw

ஆனால் அதனை செய்யாமல் அரக்கப் பரக்க அடித்து அடித்து விக்கெட்டை இழந்து விட்டார் தொடர்ந்து இப்படித்தான் செய்து வருகிறார். தனது ஆட்டத்தின் போக்கை மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் இதனை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.