இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய டி20 அணியையும் பி.சி.சி.ஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஹார்டிக் பாண்டியாவை பதவியில் இருந்து நீக்கியது தவறு :
அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு அவர்களது தலைமையின் கீழ் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தது.
ஏனெனில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் துணை கேப்டனான ஹார்டிக் பாண்டியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய துணை கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டார். இப்படி அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது பலரது மத்தியிலும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
அதேவேளையில் ஹார்டிக் பாண்டியாவின் பதவி நீக்கமும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி20 வடிவ போட்டிகளில் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்டியாவின் பதவி நீக்கம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்திய டி20 அணிக்கு வளர்ச்சி என்பது தேவைதான். முன்னர் ரோகித் இல்லாத போது துணை கேப்டனாக செயல்பட்ட பாண்டியா அணியை வழிநடத்தினார்.
அதனால் அவர் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்டார். ஆனாலும் சூரியகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ஹார்டிக் பாண்டியாவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்திய டி20 அணியை பொறுத்தவரை பாண்டியா ஒரு மூத்த வீரர் அதிலும் குறிப்பாக 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கைப்பற்ற அவரும் முக்கிய பங்கு வகித்தார்.
இதையும் படிங்க : ஜடேஜா, கே.எல் ராகுல் இல்லாமல் 15 பேர் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியை அறிவித்த – ஹர்பஜன் சிங்
இப்படி இந்திய டி20 அணிக்காக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவரை எந்த ஒரு காரணமும் இன்றி துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அவருக்கு செலக்டர்ஸ் செய்த அவமானமாக நான் கருதுகிறேன். அவரது பதவி நீக்கம் நிச்சயம் ஒரு தவறான விடயம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



