இந்திய அணியில் இவரோட கட்டம் முடிஞ்சிச்சுனு நான் நினைக்குறேன். இனிமே சேன்ஸ் கம்மிதான் – ஆகாஷ் சோப்ரா வெளிப்படை

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஜூன் 18-ஆம் தேதி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களின் கவனம் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நகர்ந்துள்ளது. அதன்படி இந்த போட்டிக்கான அணி மட்டுமின்றி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது.

INDvsNZ

- Advertisement -

இந்த 24 பேர் கொண்ட பட்டியலில் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன ஹர்டிக் பண்டியாவின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் கடந்த சில தொடர்களாகவே பந்து வீசாமல் இருப்பது அவரது நீக்கத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டு துவக்கத்தில் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா அதன்பிறகு பந்து வீசாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடைபெற்று முடிந்த இரு ஐபிஎல் தொடர்களிலும் பந்துவீசாத அவர் இங்கிலாந்து தொடருக்கான தொடரிலும் குறைவான ஓவர்கள் மட்டுமே வீசினார். இதன் காரணமாகவே அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாண்டியாவின் இந்த நீக்கம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் மட்டுமின்றி இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்லும் அவரை அணியில் சேர்க்காததால் பாண்டியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை சிக்கலில் உள்ளது என்றே கருதுகிறேன்.

Pandya

மேலும் நீண்டகாலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி விளையாட மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்திற்கு தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Pandya

ஏனெனில் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் என்றும் நிச்சயம் அவர் பந்துவீச்சில் உள்ள சில அசைவுகளை சரி செய்துகொண்டு மீண்டும் அசத்தலாக பந்து வீசுவது மட்டுமின்றி மூன்று விதமான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement