மும்பை அணியில் இவர் இருக்கும் வரை அந்த அணியை ஒன்னும் பண்ணமுடியாது – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Chopra

14வது ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எல்லா அணிகளை காட்டிலும் மும்பை அணி தான் மிக பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் கூறியுள்ளார். மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா , மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வாறு இந்த அளவுக்கு பலமாக இருக்கிறது என்பது குறித்து விவரமாக விளக்கினார்.

mi

மும்பை அணியை பொறுத்தவரையில், மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது
அவர்களது வழக்கமான இந்திய அதிரடி பேட்ஸ்மேன்களில் தான். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார்கள். இந்த ஒரு அணியிலும் இல்லாத அளவுக்கு இந்திய வீரர்கள் இவ்வளவு சிறப்பாக ஆடுவது மும்பை இந்தியன்ஸ் அணியில் தான்.

சிறப்பான தொடக்கத்தை கொடுக்க ரோகித் சர்மா, ஆட்டத்தை மாற்றிக் காட்ட சூரியகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் ஒரு பக்கம் இருக்க மறுமுனையில் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றுவதில் ஹர்டிக் பாண்டியா உதவுவார். மேலும் க்ருனால் பாண்டியாவும் அவ்வப்போது பேட்டிங் ஆடி அணிக்கு சிறப்பான வகையில் ரன்களை குவித்து கொடுக்கக் கூடிய முக்கியமான பேட்ஸ்மேன் ஆவார்.

MI

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா ஒரு சிறந்த டி20 கேப்டன் ஆவார். அதன் காரணமாகவே இதுவரை 5 ஐபிஎல் தொடரை கைப்பற்றி இருக்கிறார். அவர் எப்படி யோசிக்கிறார் அடுத்து என்ன செய்வார் என்பதை நாம் அவ்வளவு எளிதில் கணக்கிட முடியாது. எப்போதும் ஒரே மாதிரியே முகத்தை வைத்திருப்பார், ஆனால் அதன் பின் பல உத்திகளை மற்றும் வியூகங்களை அமைதியாக செயல்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடிய ஸ்மார்ட் கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். அவரது கேப்டன்சி அணிக்கு மிக மிகப் பெரிய பலமாக நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என இரண்டு வகையிலும் மிகச்சிறந்த பௌலிங் ஆர்டரை கைவசம் வைத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சஹார், பியூஸ் சாவ்லா மற்றும் தவல் குல்கர்னி மிகச் சிறப்பாக பந்து வீசுவார்கள். அவர்களுக்கு இணையாக வெளிநாட்டு வீரர்களான டிரென்ட் போல்ட், நாதன் கொல்டர் நைல், ஆடம் மில்னே போன்ற அதிரடி வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் எந்த அணியிலும் இல்லாத அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மிக அபாயகரமாக இருக்கிறது.

எனவே இவை அனைத்தையும் வைத்து பார்க்கையில் மும்பை இந்தியன்ஸ் அணியை எந்த ஒரு அணி யாரும் அவ்வளவு எளிதில் அசைக்க முடியாது என நம்புகிறேன் என்று ஆகாஷ் சோப்ரா இறுதியாக கூறி முடித்தார்.