
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரராக இடம் பிடித்து விளையாடி வரும் கே.எல் ராகுல் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் தற்போது வரை 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அவரது இந்த நேர்த்தியான நிலையான ஆட்டம் காரணமாக அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் நான்கு ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 63 ரன்கள் சராசரியுடனும், இரண்டு சதங்களுடன் 511 ரன்களை குவித்துள்ளார். முதல் நான்கு போட்டியில் இந்திய அணியின் நல்ல துவக்கத்திற்கும், பெரிய ரன் குவிப்பிற்கும் ஆதாரமாக கே.எல் ராகுல் நின்ற விளையாடியுள்ளார்.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது ஓய்வுக்கு பின்னர் கே.எல் ராகுல் அந்த பொறுப்பை கையில் எடுத்து விளையாடி வருவது பலரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக மான்செஸ்டர் நகரில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் கூட 230 பந்துகளை சந்தித்து 90 ரன்கள் குவித்து இந்திய அணி அந்த போட்டியினை டிரா செய்ய உதவி இருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த பொறுப்பான செயல்பாடு குறித்து தனது பாராட்டுகளை வெளிப்படுத்தி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : ஒரு கட்டத்தில் சிலருக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். அந்த வகையில் தற்போதைய இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பாக இருக்கும் கே.எல் ராகுலை நாம் பாராட்டியாக வேண்டும்.
ஏனெனில் தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் அனுபவ வீரராக இருக்கும் அவர் ஒரு அணி தலைவர் போல அணியின் நலனுக்காக தனது முழு பங்களிப்பை வழங்கி வருகிறார். அவரது இந்த சிறப்பான செயல்பாடே இந்திய அணியின் நல்ல நிலைக்கு காரணமாகவும் கருதுகிறேன்.
இதையும் படிங்க : அடுத்த போட்டியில் பும்ரா ஆடலனா.. அவரோட இடத்துக்கு வரப்போகும் வீரர் இவர்தான் – விவரம் இதோ
ஏனெனில் போட்டியின் ஆரம்பத்திலேயே நம்பிக்கை கொடுத்து இன்னிங்க்ஸை மிகச் சிறப்பாக துவங்குகிறார். அதனால் பின்னால் வரும் வீரர்களுக்கும் நல்ல நம்பிக்கை கிடைக்கிறது என கே.எல் ராகுலின் இந்த பொறுப்பான ஆட்டத்திற்கு ஆகாஷ் சோப்ரா பாராட்டினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.