கோலி, ரோஹித்தை விட ஐ.பி.எல் தொடரில் இவர் சூப்பரா கேப்டன்சி பண்ணாரு – ஆகாஷ் சோப்ரா ஓபன் டாக்

Chopra
- Advertisement -

பல்வேறு இன்னல்களை கடந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தலாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைத்தொடர்ந்து அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்காக தயாராகி வருவதால் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை அந்த தொடரின் மீது திரும்பியுள்ளது.

mi

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் எந்த அணி சிறப்பாக செயல்பட்டது ? எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார் ? எந்த கேப்டன் நன்றாக அணியை வழி நடத்தினார் ? என்பது குறித்து பல்வேறு விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் முதன்முறையாக கேப்டன் பொறுப்பு கே.எல் ராகுலுக்கு கொடுக்கப்படும் பொழுது நான் அவர் நன்றாக செயல்படுவாரா ? மாட்டாரா ? என தொடர்ந்து யோசனையில் இருந்தேன். துவக்கத்தில் பஞ்சாப் அணி பல தோல்விகளை சந்தித்து வந்த போது இது சரியான முடிவு அல்ல என்று நினைத்தேன்.

Rahul

ஆனால் பிற்பாதியில் பவுலர்களை சரியாக மாற்றி பந்துவீச்சாளர்களை கையாண்ட விதம் அவர்களுக்கு சில தொடர்ச்சியான வெற்றிகளைக் கொடுத்தது. மேலும் ஸ்பின்னர்களை அவர் கையாண்ட விதம் அருமையாக இருந்தது. அதே போன்று வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு எந்த நேரத்தில் ஓவர் கொடுக்க வேண்டும் என அவர் யோசித்து செயல்பட்டது எல்லாம் அற்புதமாக இருந்தது.

Rahul

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் : கேப்டன் பொறுப்பில் கே எல் ராகுல் இம்முறை துவக்கத்தில் சிறு தவறு செய்தாலும், பிற்பாதியில் அசத்தினார். எனவே அடுத்து வரும் தொடரில் அவரது செயல்பாட்டை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் விளையாடி 670 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement