- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹர்ஷித் ராணாவை இப்படி பேசுறது ரொம்ப தப்பு.. அது அவரை மனரீதியாக பாதிக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா கௌதம் கம்பீரின் ஆதரவு காரணமாகவே தொடர்ச்சியாக மூன்று வகையான இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடித்து வருகிறார் என்கிற விமர்சனம் கடந்த சில மாதங்களாகவே பலரது மத்தியிலும் பேசு பொருளாக இருந்து வருகிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்த அவர் தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பெற்றுள்ளார்.

ஹர்ஷித் ராணாவுக்கு நிர்வாகம் ஆதரவு அளிக்க வேண்டும் : ஆகாஷ் சோப்ரா

இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள வேளையில் ஹர்ஷித் ராணா இடம் பெற்றுள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வந்தாலும் அவரிடம் பெரிய விக்கெட் டேக்கிங் எபிலிட்டி இல்லை என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை அவர் 8 போட்டியில் விளையாடி 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக அவர் விளையாடிய சிட்னி போட்டியின் போது 4 விக்கெட்டுகளை எடுத்து தனது சிறப்பான செயல்பாட்டையும் வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும் அவர் மீதான விமர்சனம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

குறிப்பாக 23 வயதான அவருக்கு கௌதம் கம்பீரின் ஆதரவு காரணமாகவே தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர் திறமையற்ற வீரர் என்ற ஒரு வாசகமும் அவரை துரத்தி வருகிறது. இந்நிலையில் ஹர்ஷித் ராணா போன்ற இளமையான வீரரை அவரது கரியரின் ஆரம்பத்திலேயே அதிகளவில் விமர்சிக்க கூடாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு வீரரை விமர்சனம் செய்யும் போது அவருடைய திறனையும் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஹர்ஷித் ராணா இப்போதுதான் தனது கரியரின் ஆரம்பத்தில் இருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பது மிகவும் தவறு. ஏனெனில் இப்படியாக வெளியில் இருக்கும் விமர்சனங்கள் அவரை மனரீதியாக பாதிக்கும்.

இதையும் படிங்க : இந்தியா 349 ரன்ஸ்.. 52வது சதத்தில் கிங் கோலி 3 புதிய உலக சாதனை.. சச்சின், வார்னரை முந்தி அபாரம்

அவரிடம் திறமை இல்லை என்றால் தேசிய அணிக்கு விளையாடும் அளவிற்கு அவர் சென்றிருக்க மாட்டார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எனவே எந்த ஒரு வீரரையும் வெளியில் இருந்து விமர்சிக்காமல் அவர்களது திறமையை பாராட்டினால் நிச்சயம் அவர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -