தோனி இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குவதை முதல் முறை பார்க்கிறேன் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

- Advertisement -

சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் நிர்ணயித்த இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடிய துவங்கியபோது துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. பின்னர் பின்வரிசையில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தனர்.

srh

இறுதியில் ஜடேஜாவும் ஆட்டமிழந்து வெளியேற சாம் கரனுடன் இணைந்து தோனி வெற்றி இலக்கை நோக்கி போராடினார். அப்போது கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது களத்தில் இருந்த தோனி ரன்களை குவிக்க மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தோனியால் ரன்களை குவிக்க முடியாமல் சோர்வடைந்து காணப்பட்டார்.

- Advertisement -

மேலும் மூச்சுவிட கஷ்டப்பட்ட தோனி பேட்டை பிடித்தபடி குனிந்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தார்கள். மேலும் உடனே மருத்துவர் களத்திற்குள் வந்து தோனியை பரிசோதித்து பெயின் கில்லர் மாத்திரைகளை கொடுத்து சென்றனர். மைதானத்தில் இருந்த வெப்பநிலை மற்றும் வறண்ட காற்றினால் தோனி தொண்டையில் வறட்சி ஏற்பட்டு இருப்பதாகவும், இருமல் வர ஆரம்பித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

Dhoni

இதுபோன்று வீரர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவது கிரிக்கெட்டில் புதிதல்ல என்றாலும் கிட்டத்தட்ட 16 வருடங்களாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் தோனி இதேபோன்று களத்தில் பிரச்சனை எதிர்கொண்டது முதல் முறை தான் என்றே கூறலாம். இந்நிலையில் இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்தியாவின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் :

- Advertisement -

சென்னை அணி கடைசி 2 ஓவர்களில் 44 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மேலும் இந்த ரன்களை எடுப்பதற்கு சாத்தியமில்லை என்றாலும் தோனி இருப்பதால் ஒரு வாய்ப்பு இருக்கும் என அனைவரும் நம்பிக் கொண்டிருந்தோம். அந்நேரத்தில் தோனி விடாமுயற்சியுடன் செயல்பட்டு கொண்டிருந்தார். கடைசி சில பந்துகளில் வெற்றி வாய்ப்பை அவர் தவறவிட்டார். மேலும் தோனி கடைசி சில பந்துகளை சிக்சர் அடித்து இருந்தால் போட்டி வெற்றி பெற்றிருக்கும்.

dhoni 1

ஆனால் மைதானத்தில் உள்ள வெப்ப நிலையில் அவரது உடல் தகுதியும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதுபோன்று வெளிநாடுகளில் வெப்பநிலை காரணமாக வீரர்கள் உடல் நல பாதிப்பு எதிர் கொள்வது இயல்பு என்றாலும் தோனி இது போன்ற உடல்நல பிரச்சனைகளை சந்திப்பதை நான் முதல் முறையாகப் பார்க்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement