அடுத்த வருஷம் தோனி சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவாரா ? மாட்டாரா ? – ஆகாஷ் சோப்ரா பதில்

Chopra
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது முதல் கட்டத்தை கடந்து இரண்டாவது கட்டத்தை அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி விட்ட நிலையில் இன்று நடக்கவிருந்த 30வது லீக் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் டெல்லி அணி 8 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஆண்டு மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாமல் இருந்த சிஎஸ்கே அணி இந்த ஆண்டு மீண்டும் விசுவரூபம் எடுத்து வீழ்த்த முடியாத அணியாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த சீசனில் சுரேஷ் ரெய்னாவின் வருகை, மொயின் அலியின் சேர்க்கை மற்றும் ஜடேஜாவின் all-round பர்பார்மன்ஸ் என சிஎஸ்கே அனி வலு பெற்றுள்ளதால் நிச்சயம் இந்த ஆண்டு இறுதிக்குள் செல்லும் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்றும் கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையிலேயே சிஎஸ்கே அணியின் ஆட்டமும் அனைத்து துறைகளிலும் சிறப்பாக இருக்கிறது. இம்முறை சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றால் அடுத்த ஆண்டு தோனி விளையாட மாட்டார் என்பதே பரவலான கருத்தாக சமூகவலைதளத்தில் பேசப்படுகிறது. ஏனெனில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் 10 அணிகளுடன் மிகப்பெரிய பிரம்மாண்டமான தொடரை நடத்த இருக்க பிசிசிஐ ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. அதனால் இந்த ஆண்டு அனைத்து அணிகளையும் கலைத்து மெகா ஏலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Dhoni

அதனால் தோனி சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் தான் கடைசியாக விளையாடப் போகிறார் என்ற ஒரு தகவலும் சமூகவலைதளத்தில் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் : தோனிக்கு இது கடைசி தொடராக இருக்காது என்று நினைப்பதாக தெரிவித்த தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா : தோனி அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு குறைவுதான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி கடந்த மூன்று வருடமாக கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதில்லை.

- Advertisement -

அதிலும் ஓய்வு பெற்ற பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார், உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடுவது கிடையாது. எனவே நீண்ட காலம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒருவரை 15 கோடி ரூபாய்க்கு மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுப்பார்களா ? என்பது நிச்சயமில்லை. அதே சமயத்தில் அவரை போன்ற ஒரு வீரர் கிடைக்க மாட்டார் என்பதால் சிஎஸ்கே அணி அவரை தக்கவைக்கவே நினைக்கும். ஆனால் தோனி என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் நினைத்தது போன்று தான் செயல்படுவார் என்பதால் அடுத்த வருடம் அவர் பங்கேற்பது அவரின் கைகளிலேயே உள்ளது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Dhoni

ஆனால் தோனி கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். மேலும் கடந்த ஆண்டின் போதுகூட சிஎஸ்கே அணிக்காக அடுத்த தலைமுறை வீரர்களை அதாவது அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான வலுவான அணியை தான் நிறுவிய பின்னரே அணியை விட்டு விலகுவதாக ஒரு மறைமுக ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். இதன் காரணமாக நிச்சயம் தோனி ஓரிரு ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடி அணியை வலுவாக மாற்றிவிட்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement