இந்த வருஷம் சி.எஸ்.கே அணிக்கு பெரிய பிரச்சனையே இதுதான். எப்படி சமாளிக்க போறாங்களோ ? – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான நிலையை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் எப்பொழுதும் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இல்லை என்ற சாதனையை கடந்த ஆண்டு தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இழந்தது. மேலும் அணியில் உள்ள பல வீரர்கள் மூத்த வீரர்கள் என்பதால் மிகப்பெரிய தடுமாற்றத்தையும் சிஎஸ்கே அணி கண்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணி பெரிய சரிவை சந்திக்கும் என்றும் துவக்க போட்டிகளிலேயே மிகவும் தடுமாறும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சிஎஸ்கே அணி முதல் 5 போட்டிகளை மும்பை மைதானத்திலேயே விளையாடவுள்ளது. மும்பை மைதானம் 70 சதவீதம் வரை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் ஒன்றாகும்.

மேலும் இங்கு பேட்டிங் செய்யும் அணி முதலில் 180 ரன்கள் வரை குவிக்க சாதகமாக இருக்கும் ஆகவே எதிரணியை கட்டுப்படுத்த தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் அவசியம் ஆனால் சிஎஸ்கே அணியோ ஏகப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்து வைத்துள்ளது. போட்டி சென்னை மைதானத்தில் நடைபெறும் என்று கணக்கில் எடுத்த அவர்கள் இந்த மாற்றத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவே நிச்சயம் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மும்பையில் தடுமாறுவார்கள்.

Jadeja

அதுமட்டுமின்றி மற்ற மைதானங்களிலும் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்பதால் சிஎஸ்கே அணி எந்த அளவுக்கு சோபிக்கும் என்பது சந்தேகம்தான் என தெரிவித்துள்ளார். மேலும் மும்பையில் நடைபெறும் ஐந்து போட்டிகளில் சென்னை அணி 3 வெற்றிகளை பெற்றால் கூட அது பெரிய விஷயம் தான். ஆக மொத்தம் இந்த வருட ஐபிஎல் துவக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்காது எனவும் நிச்சயம் சிஎஸ்கே அணி தடுமாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tahir 1

மேலும் பெங்களூரு மைதானமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஒன்று எனவே அங்கும் வேகப்பந்து வீச்சு செல்லுபடியாகும். அதுமட்டுமின்றி கொல்கத்தா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருக்கும் சென்னை அணி இந்த சிக்கல்களை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறது எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகாஷ் சோப்ரா கூறியதுபோல சென்னை அணியில் ஜடேஜா, இம்ரான் தாஹிர், கரன் சர்மா, கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி, சாய் கிஷோர் என ஏகப்பட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement