சி.எஸ்.கே டீம் பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா ? செல்லதா ? வாய்ப்பு இருக்கா ? இல்லையா ? – ஆகாஷ் சோப்ரா பேட்டி

Chopra
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. முதலில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக துவங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதில் வெற்றி பெற்று விட்டது. அதை தொடர்ந்து ஆடிய போட்டிகளில் எல்லாம் படு மோசமாக செயல்பட்டு வருகிறது.

CSK-1

- Advertisement -

இதுவரை நடப்பு ஐ.பி.எல் தொடரில் 8 போட்டிகளில் ஆடி 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தற்போது 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் இருக்கிறது.மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற தோனியின் தலைமையிலான சென்னை அணி இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு செல்வதே கடினமாகிவிட்டது.

இந்நிலையில் இந்தாண்டு சி.எஸ்.கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமாயின் அடுத்து வரும் 6 போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருக்கும். அப்படி இல்லையெனில் ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமலே வெளியேற வேண்டியிருக்கும்.

out

இந்நிலையில் தொடர் தோல்விகளுக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பது குறித்து பேசியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில்…

தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 8 போட்டியில் விளையாடி 3 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதுவும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாக வேண்டும் ஆனால் இதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு தான் என்று தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

Advertisement